இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பதிவிட்டு, அனைத்திற்கும் நன்றி அண்ணா என பதிவிட்டு இருந்தார். லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட அந்த புகைப்படத்தில் விஜய் வெள்ளைநிற உடையில், செம்ம மாஸாக காட்சியளிக்கிறார்.
இந்த புகைப்படம் வேறலெவலில் இருப்பதாகவும் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு விஜய்யின் ஹேர்ஸ்டைலை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் லோகேஷ் இப்படி ஒரு மாஸான புகைப்படத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பாடகி அனிதா குப்புசாமிக்கு பிறந்த ஆண் குழந்தை... டாக்டர்கள் செய்த தவறால் ஒரே நாளில் உயிரிழந்த பரிதாபம்