வில்லன் நடிகரான பொன்னம்பலம், ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அண்மைக் காலமாக சிறுநீரக தொற்று பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, தனது சிகிச்சைக்கு உதவுமாறு மீடியா முன்பு கோரியிருந்தார்.
இதை பார்த்த ஏராளமான நடிகர்களும் அவரது ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்தனர். அதைத்தொடர்ந்து அவரது சொந்த அக்கா மகனே கிட்னியை கொடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அதன் பலனாக சிறுநீரக தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பொன்னம்பலம் தற்போது நம்முடன் உயிரோடு இருக்கிறார்.
இவையாவும் ஒரு புறம் இருக்க, பொன்னம்பலத்தின் சிறுநீரக பிரச்சனைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது. ஆனால், தற்போது சிறுநீரக பிரச்சனை குறித்து பொன்னம்பலமே என்ன காரணம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகர் பொன்னம்பலத்தின் அப்பாவுக்கு 4 மனைவிகள். அதில் 4வது மனைவிக்கு பிறந்தவர் தான் பொன்னம்பலம். இருப்பினும், 4 மனைவிகளின் பிள்ளைகளும் ஒற்றுமையாக தான் வளர்ந்து வந்துள்ளனர். அதில் 3வது அம்மாவிற்கு பிறந்த சகோதரன் தான் தனக்கு ஸ்லோ பாய்சன் விசம் கொடுத்து விட்டதாக பொன்னம்பலம் கூறியிருக்கிறார். ஏனென்றால் சினிமாவில் பொன்னம்பலத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத அண்ணன், ஒரு முறை சாப்பாட்டில் ஸ்லோ பாய்சன் விசம் கலந்து இரு முறை கொடுத்து இருக்கிறார் என கூறியுள்ளார்.
பொன்னம்பலம் ஒரு முறை நடுராத்திரியில் வீட்டின் பால்கனியில் நின்றிருக்கிறார். அப்போது அவருடைய சகோதரன் வீட்டின் பின்புறத்தில் ஒரு குழி தோண்டி மாந்திரீக பொம்மை, பொன்னம்பலம் பயன்படுத்திய உடை போன்றவற்றை எல்லாம் போட்டு செய்வினையும் செய்திருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ந்து போன பொன்னம்பலம் அந்த துரோகிகளை கையும் களவுமாக பிடித்து துரத்தியுள்ளார்.
இவ்வாறாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், ஸ்லோ பாய்சன் காரணமாக சாவின் விளிம்புக்கே சென்று திரும்பியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தை பற்றி தற்போது கூறியிருக்கும் பொன்னம்பலம், கடவுளின் அருளால் தான் நலமுடன் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தக்க நேரத்தில் தனக்கு உதவி செய்த நடிகர்களுக்கும், முகம் தெரியாத ஏராளமான ரசிகர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.