முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. எம்ஜிஆர் துவங்கி தற்போது ரஜினி கமல் என அனைவர் மீதும் அரசியல் முத்திரைகள் உள்ளன. கமலஹாசன் ஒருவழியாக அரசியல் கட்சி தொடங்கிவிட்டதையடுத்து, ரஜினி துவங்குவார் துவங்குவார் என ரசிகர்கள் காத்திருந்தது தான் மிச்சம். தனது உடல் நிலையை காரணம் காட்டி அவர் பின்வாங்கி விட்டார்.
அதோடு தான் அரசியலுக்கு வர மாட்டேன் என இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை. அவரது படங்கள் மற்றும் விழாக்களிலும் அரசியல் குறித்த விமர்சனங்களை அவ்வப்போது விஜய் வைத்து தான் வருகிறார். மேலும் இவர் மீது பாஜகவினரின் விமர்சனம், பண மதிப்பிழப்பு குறித்து விஜயின் கண்டனம், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் வீட்டிற்கு விஜய் சென்றது, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது, விஜய் சூட்டிங்கில் வருமான வரித்துறை சோதனை உள்ளிட்டவை மூலம் என அரசியல் நுழைவிற்கான அத்தியாயத்தை விஜய் துவங்கிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றன.
vijay makkal iyyakam
மேலும் விஜய் மக்கள் இயக்கம் இவரின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்திக்கொள்ள விஜயே அனுமதியும் கொடுத்துள்ளார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்தை இன்று ரசிகர்கள் சந்தித்துள்ளனர். அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் கோசமிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வருங்கால முதலமைச்சர் தளபதி வாழ்க, வருங்கால துணை முதலமைச்சர் ஆனந்த் வாழ்க என கோசமிட்டுள்ளனர் விஜயின் ரசிகர்கள். அதோடு 2026 தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்றும் உறுதியாக கூறுகின்றனர் தளபதின் தொண்டர்கள்.
மேலும் செய்திகளுக்கு...Vaishali Takkar : தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை வசமாக சிக்கிய முன்னாள் காதலன்