Vijay Antony Talks to His Deceased Daughter Meera : நடிகரும் - இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இறந்து போன தனது மகள் மீராவுடன் தினந்தோறும் பேசுவதாக கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னை தானே செதுக்கிக்கொண்டவர் தான், விஜய் ஆண்டனி. இவர் நடித்து முடித்துள்ள 'சக்தி திருமகன்' திரைப்படம் இந்த வாரம் செப்டம்பர் 19-ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில், பின்னர் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வரும் விஜய் ஆண்டனி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னுடைய மகள் மீரா பற்றி மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.
விஜய் ஆண்டனி, கடந்த 2006-ஆம் ஆண்டு, பாத்திமா என்கிற தொகுப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீரா - லாரா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். தன்னுடைய குடும்பத்துடன் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் உள்ள பங்களா ஒன்றில் வசித்து வரும் நிலையில்... கடந்த 2 வருடங்களுக்கு முன் விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா மன அழுத்தம் காரணமாக தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 16 வயதிலேயே மீரா எடுத்த இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
மீராவின் மறைவுக்கு பின்னர் விஜய் ஆண்டனி மனதளவில் நொறுங்கி விட்டாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் உள்ளார். அதே போல் எங்கு சென்றாலும் தன்னுடைய இளைய மகள் லாராவையும் கூட்டி சென்று கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். ஷூட்டிங்கை தவிர்த்து பெரும்பாலும், செருப்பு போட்டு நடப்பதை கூட விஜய் ஆண்டனி தவிர்த்துவிட்டார்.
44
மகளுடன் தினமும் பேசுகிறேன்:
இந்த நிலையில் தான் விஜய் ஆண்டனி பேசி உள்ள தகவல் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது மகளின் இழப்பு குறித்து இவரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது, "இது இழப்பு இல்லை. அவள் என்னுடன் தான் இருக்கிறாள், ஆவலுடன் நான் தினமும் பேசுகிறேன், என்னுடனே அவள் பயணிக்கிறாள். அவளை மிஸ் செய்கிறேன் என்று சொன்னால் அது சரியாக இருக்காது ' என மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.