2025-ம் ஆண்டு தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் இந்திய அளவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான். அந்த வகையில் 2025-ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் அள்ளி இந்திய பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 இடம்பிடித்த படங்களின் பட்டியலையும், அப்படங்கள் எவ்வளவு வசூலித்தது என்பதைப் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
211
10. ரெய்டு 2
இந்த ஆண்டு வெளியான அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் வாணி கபூர் நடித்த 'ரெய்டு 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ராஜ் குமார் குப்தா இயக்கிய இப்படம் உலகளவில் ரூ.243.06 கோடி வசூலித்தது.
311
9. லோகா சாப்டர் 1: சந்திரா
டொமினிக் அருண் இயக்கிய மலையாளப் படமான 'லோகா சாப்டர் 1' இன்னும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி மாஸ்டர் நடித்த இப்படம் உலகளவில் ரூ.250 கோடி வசூலித்துள்ளது.
அமீர் கான் மற்றும் ஜெனிலியா டிசோசா நடித்த 'சிதாரே ஜமீன் பர்' படத்தை எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்று, உலகளவில் ரூ.266.49 கோடி வசூல் செய்தது.
511
7. சங்கராந்திக்கு வஸ்துன்னம்
தெலுங்கு ஆக்ஷன்-காமெடி படமான 'சங்கராந்திக்கு வஸ்துன்னம்' படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர். அனில் ரவிபுடி இயக்கிய இப்படம் உலகளவில் ரூ.267.05 கோடி வசூலித்தது.
611
6. எம்புரான்
மலையாள அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'L2: எம்புரான்' படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இதில் மோகன்லாலுடன் இணைந்து அவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகளவில் ரூ.268 கோடி வசூலித்தது.
711
5. மகாவீர் நரசிம்மா
அனிமேஷன் படமான 'மகாவதார் நரசிம்மா' படத்தை அஷ்வின் குமார் இயக்கியுள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு, உலகளவில் ரூ.310 கோடி வசூலித்துள்ளது.
811
4. வார் 2
அயன் முகர்ஜி இயக்கிய 'வார் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் ரூ.351 கோடி வசூல் செய்துள்ளது.
911
3. கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் வெளியானதும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் உலகளவில் ரூ.517.60 கோடி வசூல் செய்தது.
1011
2. சையாரா
மோஹித் சூரி இயக்கிய 'சையாரா' திரைப்படம் இந்த ஆண்டு பெரும் சாதனையை படைத்தது. அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடித்த இப்படம், வெளியானதில் இருந்து அதிரடி வசூல் செய்து, உலகளவில் ரூ.577.74 கோடி ஈட்டியது.
1111
1. சாவா
விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'சாவா' திரைப்படம், 2025ல் உலகளவில் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படமாகும். லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இப்படம் உலகளவில் ரூ.809 கோடி வசூலித்துள்ளது.