ஹாலிவுட்டில் துவங்காட்ட 'பிக் பிரதர்' நிகழ்ச்சியில் இருந்து தோன்றியது தான் பிக்பாஸ். ஹிந்தியில் இதுவரை சுமார் 15 சீசன்களை கடந்துவிட்ட பிக்பாஸ், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் துவங்கப்பட்டது. குறிப்பாக தமிழில் 2017-ஆம் ஆண்டு, விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து துவங்கிவைத்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் தான்.
முதல் சீசனே ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், அதனை மிகவும் சாமர்த்தியமாக கொண்டு சென்றார் கமல். இவர் தொகுத்து வழங்குவதையும், அவர் போட்டியாளர்கள் மனசு நோகாமல் கேட்கும் கேள்விகளை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.