இது குறித்து தமிழக அரசு விசாரணை குழு ஒன்றையும் அமைத்தது. இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து விட்டதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிய ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் தனது பிள்ளை தன் மீது சிறுநீர் கழித்த அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர் தனது கனவு நனவாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.