சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்த வரலாற்று நாடகமான பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வந்து ரசிகர்களை மனதில் குடி கொண்டவர் விக்ரம். இவரின் முந்தைய படமான கோப்ரா படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகிய தோல்வியை சந்தித்தது.
23
vikram pa ranjith
ஆனால் அதற்கும் சேர்த்து விக்ரமிற்கு புகழைத் தேடிக் கொடுத்தது நபொன்னியின் செல்வன். தற்போது விக்ரமின் 61வது படம் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் கடப்பாவில் அக்டோபர் 17ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்தபடத்தை பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்க உள்ளார். முன்னதாக ராஷ்மிகா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையி தற்போது மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனிடம் தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என தகவல் பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.