ஆச்சார்யா தோல்விக்கு நான் பொறுப்பு...மாஸ் காட்டும் சிரஞ்சீவி

First Published | Oct 16, 2022, 2:51 PM IST

நானும் ராம் சரணும் 80 சதவீதம் பணத்தை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து விட்டோம். ஆச்சாரியா படம் குறித்த எந்த குற்ற உணர்வு எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் என தந்தை மகன்கள் இணைந்து இருந்தனர். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படம் பலகட்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது.

Acharya

முன்னதாக ராம்சரண் நடித்த ஆர் ஆர் ஆர் படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனால் இந்த படம் குறித்த அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு கூட படத்திற்கு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு... தீவிர ரசிகனாக இருந்தும் CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத் - காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க..!

Tap to resize

acharya

கதையும் சொல்உம விதம் சரியில்லை என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால் படம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. 140 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 76 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருந்தது. இதனால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக சிரஞ்சீவி இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஆச்சாரியா படம் தோல்வி அடைந்ததற்கான முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். படம் நஷ்டமானதை அடுத்து .  நானும் ராம் சரணும் 80 சதவீதம் பணத்தை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து விட்டோம். ஆச்சாரியா படம் குறித்த எந்த குற்ற உணர்வு எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... சம்பளமே வாங்காமல் அனிருத் இப்படி ஒரு வேலையை செய்கிறாரா..! ஆச்சர்யம் ஆனால் உண்மை

Latest Videos

click me!