6 வருடங்கள் உருக உருக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, கணவன் மனைவி பந்தத்தை அனுபவித்து வருகிறார்கள். பட வேலைகள் இல்லாத போது, தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள, திருமணத்திற்கு முன்பு டேட்டிங் சென்ற இந்த ஜோடி... தற்போது ஹனி மூனுக்கு பறக்கிறது.
இப்படி வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், அங்கு எடுத்த விதவிதமான ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை ஜெலஸ் ஆக்கி வந்த விக்கி மீண்டும் பட வேலைகளிலும், மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
காதல் மனைவி நயன்தாரா நடித்துள்ள பிரபல பிராண்டின் விளம்பர படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கி உள்ளார். இதுகுறித்த, விளம்பர பலகையை காரில் சென்று கொண்டிருக்கும் போது , எடுத்து வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் 'இதுதான் என் முதல் டிவி விளம்பரம்' என தெரிவித்து இருக்கிறார்.