பாலிவுட் திரையுலக கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர், சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் இடம்பெற்ற குத்து பாடலான 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனம் ஆடியதற்காகசுமார் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். பல நடிகைகளுக்கு ஐந்து திரைப்படத்தில், நடித்தால் கூட இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து சமீபத்தில் பிரபல நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொண்ட கத்ரீனா கைப் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த 'அக்னீபாத்' படத்தில் இடம்பெற்று சிக்கி சம்போலி படாலில் நடனம் ஆடியதற்காக 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இவர் தமிழில் சமீபத்தில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்ற 'லெஜண்ட்' படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் பாலிவுட் திரைப்படத்தில் ஐடோ கி ஜம்பி பாடலில் நடனம் ஆடியதற்காக, 40 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.