விடாமுயற்சியை விரட்டி வரும் படங்கள் என்னென்ன? இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் மூவீஸ்

Published : Feb 05, 2025, 07:37 AM IST

This Week Theatre and OTT Release Movies : பிப்ரவரி 6ந் தேதி அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு போட்டியாக என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
14
விடாமுயற்சியை விரட்டி வரும் படங்கள் என்னென்ன? இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் மூவீஸ்
தியேட்டர் ரிலீஸ் படங்கள்

2025ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியதுபோல இருந்தது அதற்கு ஒரு மாதம் ஜெட் வேகத்தில் சென்றுவிட்டது. ஜனவரி மாதம் தமிழ் சினிமாவுக்கு ஓரளவுக்கு சுமாரான மாதமாகவே சென்றிருந்தது. ஏனெனில் கடந்த மாதம் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தமிழில் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் வசூலும் பெரியளவில் இல்லை. அந்த கவலையை போக்க பிப்ரவரி மாதம் முதல் வாரமே பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த வாரம் என்னென்ன படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.

24
விடாமுயற்சி

பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக தொடங்க முக்கிய காரணம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தான். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் நெகடிவ் கதாபாத்திரங்களில் ஆரவ், அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் அஜித்தின் எவர்கிரீன் ஹிட் சாங்!

34
தண்டேல்

விடாமுயற்சி படத்துக்கு போட்டியாக தியேட்டரில் ரிலீசாகும் ஒரே படம் தண்டேல் தான். இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தை சந்தூ மொண்டேட்டி இயக்கி இருக்கிறார். மீனவர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு படமான இது தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு பிப்ரவரி 7ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

44
ஓடிடியில் என்னென்ன படங்கள்?

பிப்ரவரி 7ந் தேதி ஓடிடியில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம்சரண் நாயகனாக நடித்திருந்தார். மேலும் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தியேட்டர் பிளாப் ஆன இப்படம் பிப்ரவரி 7ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதுதவிர இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன மெட்ராஸ்காரன் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் ஷான் நிகம், நிஹாரிகா, கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பிப்ரவரி 7ந் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. 

இதையும் படியுங்கள்... ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

click me!

Recommended Stories