'கத்தி' பட வில்லனை விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ் - கூகுளில் தேடி பார்த்து ரிலீஸ் செய்த சம்பவம்!

விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை நியூயார்க் போலீசார் கிட்டத்தட்ட 4 மணி நேரம் சிறைபிடித்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
 

Thalapathy Vijay Kathi Movie villain Neil Nitin Mukesh About Arrest mma
விஜய்யின் கத்தி பட வில்லன்

விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் 'கத்தி'. இந்தப் படத்தில் கார்ப்பரேட் வில்லன் ரோலில் நடித்தவர் பாலிவுட் ஆக்டர் நீல் நிதின் முகேஷ் சந்த் மாத்தூர். இந்தப் படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய நீல் நிதின் முகேஷ்க்கு சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்காக சைமா விருது பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், அவருக்கு இந்த விருது கிடைக்கவில்லை. 

நடிகர் நீல் நிதின் முகேஷ்

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கவில்லை என்றாலும் கூட ஹிசாப் பராபர் படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடித்திருந்தார். சாஹோ படத்தில் பிரபாஸிற்கு வில்லனாக நடித்திருந்தார். இவரது தோற்றமும், நடிப்பும் இவரை இந்தியராகவே காட்டவில்லை. ஏதோ வெளிநாட்டைச் சேர்ந்த நடிகர் போன்று தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் தான் நியூயார்க் சென்றிருந்த போது தனக்கு நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி நீல் நிதின் முகேஷ் வெளிப்படையாக பேசிய வீடியோ ஒன்றில் பகிர்ந்து கொள்ள அந்த தகவல், சோஷியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!


இந்தியர் போல் இல்லை என்பதற்காக நடந்த கைது சம்பவம்

அதாவது அவர் நியூயார்க் படத்தில் நடித்தபோது போது தான் இந்த சம்பவம் நடந்ததாம்.  நியூயார்க் விமானநிலையத்தில் பாதுகாப்பு போலீசாரால் இவரை திடீர் என தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரை பார்த்தால் அவர்களுக்கு இந்தியன் போன்று தெரியவில்லை என்று கூறி, என்னை கிட்டத்தட்ட 4 மணி நேரம் இவரை சிறைபிடித்து வைத்திருந்தார்களாம். நீல் நிதின் முகேஷை பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லையாம். தொடர்ந்து அவரிடம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்துள்ளனர். என்னிடம் இந்தியன் பாஸ்போர்ட் இருப்பதாக கூறியும் அவர்கள் நம்ப மறுத்துள்ளனர்.

கூகுளில் தேடி பார்த்த பின் விடுவித்தனர்:

கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் தன்னை பேச அனுமதி அளித்தார்கள். சரி நீ என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டார்கள். அப்போது நான் என்னுடைய பெற்றோர் இருவருமே பாடகர்கள், நான் பாடகர் மட்டும் இன்றி ஒரு இந்திய நடிகன். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளேன். நீங்களே கூகுளில் தேடி பாருங்கள் என்று கூற அவர்களும் தேடி பார்த்த பிறகு தான் என்னை விடுவித்தார்கள் என்று கூறியுள்ளார்.

'தங்கலான்' பட ஹிட் பாடலுக்கு அரை மணிநேரத்தில் டியூன் போட்ட ஜிவி பிரகாஷ்!

நியூயார்க் படத்தில் நடித்த போது நடந்த சம்பவம்:

ஆனால், இந்த சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், நீல் நிதின் முகேஷ், கத்ரீனா கைஃப், இர்ஃபான் கான் ஆகியோர் பலரது நடிப்பில் 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் நியூயார்க். இந்த படத்தின் போது தான் நீல் நிதின் முகேஷிற்கு இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதைப் பற்றி தான் சமீபத்தில் அவர் பேசியிருக்கிறார். இது போன்ற ஒரு சம்பவம் நடிகர் சூர்யாவிற்கும் நடந்திருக்கிறது. அதுவும், சிங்கம் 3 படத்தில் விமான நிலைய காட்சியின் போது சூர்யாவின் விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்துவார்கள். கடைசியில் கூகுளில் துரைசிங்கம் என்று தேடி பார்த்து சூர்யாவிற்கு சல்யூட் அடித்து அவரை விடுவிப்பார்கள். இந்த சம்பவத்தை தான் நீல் நிதின் முகேஷ் விமான நிலையத்தில் சந்தித்திருக்கிறார்.

Latest Videos

click me!