பூஜா ஹெக்டேவுக்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைக்க ‘இந்த’ பிளாப் படம் தான் காரணமாம்!

Published : Feb 04, 2025, 02:40 PM IST

சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தனக்கு எப்படி அந்த பட சான்ஸ் வந்தது என்பதை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

PREV
14
பூஜா ஹெக்டேவுக்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைக்க ‘இந்த’ பிளாப் படம் தான் காரணமாம்!
ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டே

கங்குவா படத்தின் தோல்விக்கு பின் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மலையாள நடிகை ஜோஜு ஜார்ஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை 2 டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.

24
மே மாதம் ரிலீசாகும் ரெட்ரோ

ரெட்ரோ படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அந்தமான், சென்னை, ஊட்டி என பல்வேறு பகுதிகளில் படமாக்கி உள்ளனர். காதலும், ஆக்‌ஷனும் கலந்த வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கங்குவா தோல்வியால் துவண்டு போய் உள்ள சூர்யாவுக்கு இப்படம் தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரசிகர் கொடுத்த அட்வைஸ்; ஆளே டோட்டலாக மாறிய சூர்யா!

34
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே

ரெட்ரோ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்திற்கு முன்னர் இவர் தமிழில் நடித்த முகமூடி, பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவினாலும், இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் பூஜா. இந்நிலையில், தனக்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றிய சுவாரஸ்ய தகவலை நடிகை பூஜா ஹெக்டே சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

44
ரெட்ரோ சான்ஸ் கிடைத்தது எப்படி?

அதன்படி தான் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து பிளாப் ஆன ராதே ஷியாம் படம் மூலம் தான் தனக்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைத்ததாக பூஜா ஹெக்டே கூறி உள்ளார். ராதே ஷியாம் படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் தனது நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆகிதான் தனக்கு கார்த்திக் சுப்புராஜ், ரெட்ரோ பட வாய்ப்பை கொடுத்ததாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். ராதே ஷியாம் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டாலும் அதன்மூலம் தனக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என பூஜா தெரிவித்துள்ளார். ராதே ஷியாம் திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி ரூ.150 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மாடர்ன் உடையில் மயக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே

Read more Photos on
click me!

Recommended Stories