Published : Feb 04, 2025, 08:00 PM ISTUpdated : Feb 04, 2025, 08:06 PM IST
நயன்தாராவின் ஆவணப்படம் வெளியானது போலவே, இப்போது நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணமும் ஆவணப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி 2022-ல் திருமணம் செய்து கொண்டனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிக்கும் நயன்தாரா தனது திருமணத்தை நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற டைட்டிலில் ஆவணப்படமாக வெளியிட்டார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் முதல் திருமணம் வரையிலான காட்சிகள் இடம் பெற்றன. நயன்தாராவின் இந்த ஆவணப்படத்திற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்ததாக கூறப்பட்டது.
25
நயன்தாராவின் திருமண ஆவணப்படம்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி, இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு உலக் மற்றும் உயிர் என்று இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் கூட நயன் தாரா தான் நம்பர் 1 நடிகையாக சினிமா சாதித்து வருகிறார். அதோடு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் இப்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஜோடியான நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஜோடியும் இணைந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
45
டோலிவுட் மீடியாவில் வலம் வரும் தகவல்
இந்த நிலையில் தான் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலி பாலாவின் திருமணம் ஆவணப்படமாக வெளியாக உள்ளதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு தகவல் சுற்றி வருகிறது. அதையும் நெட்பிளிக்ஸ் நிறுவனமே வெளியிட உள்ளதாம். காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதே போல் நாக சைத்தானா - சோபிதா இருவருமே தங்களின் திருமணத்தை பிரைவேட் நிகழ்ச்சியாகவே நடத்த விரும்பியதால், குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மாட்டுமே அழைப்பு விடுத்தனர். எனவே இப்படி வெளியாகும் தகவல், வதந்தியாக இருக்க கூடும் என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.