அஜித் நடித்துள்ள விடாமுயற்சி பிரேக்டவுன் படத்தின் ரீமேக் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது இரண்டு ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் மட்டும் 1000 திரைகளில் ரிலீஸ் செய்துள்ளது.
24
பிரேக்டவுன் ரீமேக்
விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இதன் ரீமேக் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. விடாமுயற்சி, பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்கிற விஷயம் லீக் ஆனதும், பிரேக்டவுன் படத்தை தயாரித்த நிறுவனம் ரீமேக் உரிமைக்காக ரூ.150 கோடி கேட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி 11 கோடிக்கு டீல் பேசி முடித்த லைகா நிறுவனம் படத்தின் லாபத்திலும் பங்கு கொடுப்பதாக கூறி இருக்கிறது.
இதன்பின்னரே விடாமுயற்சி படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் அஜித் படம் ரிலீஸ் ஆகி உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை பார்த்து வருகின்றனர். இன்று காலை முதலே தியேட்டர்கள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டிருந்தது. அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், தியேட்டர் முன் மேள தாளம் முழங்க ரசிகர்கள் ஆட்டம் போட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
44
2 ஹாலிவுட் படங்களின் காப்பி
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் ஷோ முடிந்ததும் அப்படத்தின் கதை தெரியவந்துள்ளது. முன்னதாக இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை மட்டும் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் என எண்ணி வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மற்றொரு ஹாலிவுட் படத்தையும் இதில் காப்பியடித்திருக்கிறார்களாம். அந்த படத்தின் பெயர் லாஸ்ட் சீன் அலைவ். இந்த இரண்டு படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து தான் விடாமுயற்சியை இயக்கி இருக்கிறார் மகிழ் திருமேனி. பிரேக்டவுன் படக்குழுவை போல் லாஸ்ட் சீன் அலைவ் படக்குழுவும் பிரச்சனை செய்தால் விடாமுயற்சி படத்துக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.