முதல் முறை நாக சைதன்யா சோபிதா திருமணம் பற்றி ரியாக்ட் செய்த சமந்தா?

Published : Feb 05, 2025, 10:33 PM IST

Samantha react to Naga Chaitanya-Sobhita Dhulipala Relationship: திருமணம் மற்றும் குழந்தைகள் மட்டுமே பெண்ணின் முழுமைக்குக் காரணமல்ல, தனிமையிலும் மகிழ்ச்சி சாத்தியம் என்கிறார் சமந்தா. சமீபத்திய நேர்காணலில் தனது வாழ்க்கைப் பார்வையைப் பகிர்ந்துள்ளார். நாக சைதன்யா - சோபிதா திருமணம் குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

PREV
15
முதல் முறை நாக சைதன்யா சோபிதா திருமணம் பற்றி ரியாக்ட் செய்த சமந்தா?
Samantha Ruth Prabhu

திருமணமாகி குழந்தைகளைப் பெற்றால் மட்டுமே ஒரு பெண் முழுமையடைவாள் என்ற பொதுபுத்தி கருத்தை உடைக்க விரும்பும் சமந்தா, இப்போது தனிமையாக இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். சமீபத்திய ஒரு நேர்காணலில், சமந்தா இதைப் பற்றிப் பேசியுள்ளார்.

25
Naga Chaitanya, Sobhita Dhulipala

தன்னைப் பற்றி வலம் வரும் கட்டுக்கதைளுக்கும் பதில் கூறியுள்ளார். எந்தப் பெயரைகுறிப்பிட்டாமலே அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதுபற்றி கசப்பாக உணர்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கும் சமந்தா நிதானமான பதில் கொடுத்துள்ளார்.

35
Naga Chaitanya-Sobhita Dhulipala's relationship

"ஒரு முழுமையான பெண்ணாக இருக்க, திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இங்கே உள்ளது. ஒருவர் அப்படி இல்லை என்றால், தானாகவே அவர் சோகமாகவும் தனிமையாகவும் இருக்கிறார் என்று கருதுவது மிகவும் தவறு. அதில் உண்மை இல்லை" என சமந்தா தெரிவித்துள்ளார்.

45
Samantha about Naga Chaitanya

ஒரு பெண் தானாகவே மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த நேர்காணலில் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மறைமுகமாக நாக சைதன்யா - துலிபாலா திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சமந்தா சாமர்த்தியமாக பதில் சொன்னார்.

55
"No space for envy" says Samantha

"என் வாழ்க்கையில் நான் நிறைய விஷயங்களைச் சந்தித்திருக்கிறேன், அனைத்தையும் பற்றி இப்போது சிந்திக்க முடியாது. நான் முற்றிலும் தவிர்க்க விரும்பும் ஒரு குணம் பொறாமை. அது என்னிடம் இருக்க நான் அனுமதிக்கவே மாட்டேன். பொறாமைதான் எல்லா தீமைகளுக்கும் வேர் என்று நினைக்கிறேன். பொறாமை போன்ற ஆரோக்கியமற்ற எதற்கும் நான் இடம் கொடுப்பதில்லை" என சமந்தா தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories