
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில், ஏராளமான மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ஜூன். ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படும் இவர், நாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவர். தேசிய கொடியை தனது கையில் இவர் பச்சை குத்திக் கொண்டிருப்பதும், அவருக்கு தேசத்தின் மீது உள்ள பற்று காரணமாகவே.
சிறு வயது முதலே இந்திய இராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அர்ஜூன். அதற்காக ஆர்மி அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்து அம்மாவிடம் கொடுத்து சைன் போடும் படி கேட்டுள்ளார். அப்போது அந்த ஃபார்மில் உயிருக்கு என்ன நேர்ந்தாலும், அதற்கு நாங்கள் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அர்ஜூனின் அம்மா லட்சுமி தேவி பார்த்துவிட்டார். இதனால் தன்னுடைய மகனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதுமட்டுமின்றி கையெழுத்தும் போட மறுத்து விட்டாராம்.
த்ரிஷா தான் விடாமுயற்சி படத்தின் வில்லியா? உளறிய பிரபலம் - டீ கோட் செய்த ரசிகர்கள்!
அதனால், அவர் இந்திய இராணுவத்திற்கு செல்லவில்லை என கூறியுள்ளார். இல்லையென்றால் இன்று நானும் ஒரு ஆர்மி ஆபிஷராக இருந்திருப்பேன் என தன்னுடைய நிகழ்ச்சியில் பேசி உள்ளார். அப்படி இராணுவ பற்று கொண்ட ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது படங்களில் போலீஸ், ஆர்மி, சிஐடி போலீஸ் ஆகிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து ஜெயித்தவர். இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற ஆசை சில படங்கள் மூலம் நிஜத்தில் தற்போது வரை நிறைவேறாமல் போனது சோகம் தான்.
இவரின் குடும்பம் கன்னட சினிமா பின்னணியை கொண்டது என்பதால், அர்ஜூன் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கினார். அர்ஜூனின் அப்பா ஜேசி ராமசுவாமி, ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டு காலமாக கன்னட சினிமாவில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலும் வில்லன் ரோல் தான். அர்ஜூனின் அம்மா லட்சுமி தேவி ஒரு டீசர்.
பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!
ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த அர்ஜூனுக்கு முதல் வாய்ப்பு கொடுத்தது நன்றி என்ற தமிழ் படம் தான். இயக்குநர் ராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக், நளினி ஆகியோருடன் இணைந்து அர்ஜூனும் நடித்திருப்பார். அதன் பிறகு கடமை, நாகம், இளமை, வேஷம், எங்கள் குரல், யார், அவன், தாய்மேல் ஆணை, கல்யாண கச்சேரி, ஜெய்ஹிந்த், வேட்டை என்று 160க்கும் அதிகமான படங்களில் நடித்தார். ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகம், இயக்குநராகவும், பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். இதுவரையில் அர்ஜூன் 12 படங்களை இயக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஏராளமான படங்களுக்கு விநியோகஸ்தர்களாகவும் இருந்துள்ளார். சேவகன், பிரதாப், ஜெய் ஹிந்தி, தாயின் மணிக்கொடி, சுயம்வரம், வேதம், ஏழுமலை, பரசுராம், மதராஸி, ஜெய் ஹிந்த் 2, சொல்லி விடவா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஆக்ஷன் கிங் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். இப்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்க கூடிய விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படம் நாளை 6ஆம் தேதி திரைக்கு வருகிறது. விடாமுயற்சியைத் தொடர்ந்து அகத்தியா, சீதா பயணம், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
வைகை புயலுக்கு அடித்த ஜாக்பார்ட்; 'பொன்னியின் செல்வன்' நடிகர் படத்தில் இணைந்தார் வடிவேலு!