த்ரிஷா தான் விடாமுயற்சி படத்தின் வில்லியா? உளறிய பிரபலம் - டீ கோட் செய்த ரசிகர்கள்!

Published : Feb 05, 2025, 02:56 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'விடமுயற்சி' திரைப்படம் குறித்த சில சுவாரசிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிரபலம் கூறிய ஒரு தகவலை வைத்து, இப்படத்தின் கிளைமேஸ் இப்படி கூட அமையலாம் என ரசிகர்கள் டீ கோட் செய்துள்ளனர்.  

PREV
15
த்ரிஷா தான் விடாமுயற்சி படத்தின் வில்லியா? உளறிய பிரபலம் - டீ கோட் செய்த ரசிகர்கள்!
அஜித் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு:

நடிகர் அஜித்துக்கு, இருக்கும் ரசிகர்கள் பலம் குறித்து சொல்லவே வேண்டாம். அவர் தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை கலைத்த பின்னரும் கூட, தமிழக மட்டுமின்றி வெளிநாட்டிலும் ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இவரை கொண்டாடி வருகிறது. அஜித்தின் பிறந்தநாள் மற்றும் அவர் திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் போது, தான் தல ரசிகர்களுக்கு திருவிழா என்றே சொல்லலாம்.

ரசிகர்களின் இந்த செயலை பலமுறை நடிகர் அஜித் தவிர்க்க சொல்லி கூறி இருந்தாலும், ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் காரணமாக இது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டு அஜித், தன்னுடைய ரசிகர்களுக்கு நடிப்பை தாண்டி பல இன்ப அதிர்ச்சியை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார்.

25
துபாயில் நடந்த கார் ரேஸில் 3-ஆவது இடம் பிடித்த ரேஸிங் அணி

அஜித்தின் 24 ஹவர்ஸ் கார் ரேஸ் துபாயில் நடந்த போது, அவருடைய கார் ரேஸை நேரில் பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்று கண்டு ரசித்தனர். இந்த தகவல் துபாயில் கார் ரேஸில் ஈடுபட்ட மற்ற ரேஸர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, அஜித்தின் ரேஸிங் அணி 3-ஆவது இடத்தை கைப்பற்றியது.

பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!

35
அஜித்தின் கார் ரேஸ் மற்றும் பத்ம பூஷன் விருது ரசிகர்களுக்கு கொடுத்த மகிழ்ச்சி

கார் ரேஸை தொடர்ந்து, அஜித்துக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து வெளியாக போகும்,  விடாமுயற்சி திரைப்படமும் இவருக்கு வெற்றியாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார்.

45
விடாமுயற்சி ப்ரீ புக்கிங் வசூல் நிலவரம்

தற்போது உலகம் முழுவதும் விடாமுயற்சி திரைப்படத்தின் பிரீ புக்கிங் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்திய அளவில் சில மணி நேரங்களில் மட்டும் சுமார் 15 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங்கில் விடாமுயற்சி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த படம் குறித்து, பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில்... பிக் பாஸ் பிரபலமும் திரைப்பட ஆர்வலருமான அபிஷேக் ராஜா, விடாமுயற்சி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து கூறியுள்ள தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விடாமுயற்சி ஃப்ரீ புக்கிங் சேல்ஸ்; இந்திய அளவில் அஜித்தின் மாஸை உறுதி செய்த 8 சிட்டிஸ்!

55
விடாமுயற்சி கிளைமேக்ஸ் ட்விஸ்ட்:

அவர் இப்படம் குறித்து கூறும் போது: "விடாமுயற்சி திரைப்படம் 'பிரேக் டவுன்' திரைப்படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டாலும், இந்த படத்தை இங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்ப... மற்றும் அஜித்துக்கு ஏஏற்ப கதையில் சில மாற்றங்களை பட குழுவினர் செய்திருக்கலாம். குறிப்பாக கிளைமாக்ஸ்-ல் த்ரிஷாவே கூட நெகட்டிவ் ரோலில் நடித்து இருக்க வாய்ப்புள்ளது. தன்னுடைய கணவரை பழி வாங்குவதற்காக இவரே காணாமல் போனது போல் நாடகமாடுவது போல் கதையில் இயக்குனர் மாற்றம் செய்திருக்கலாம் என கூறியுள்ளதால்... இந்த தகவலை டீ கோட் செய்யது, ஒருவேளை இப்படி தான் கிளைமாக்ஸ் அமையப்போகிறதா? என ரசிகர்களும் இந்த படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories