படமே ரிலீஸ் ஆகல அதற்குள் இத்தனை கோடி லாபமா? டிராகன் படத்திற்கு அடித்த ஜாக்பாட்

Published : Feb 05, 2025, 02:50 PM ISTUpdated : Feb 05, 2025, 03:19 PM IST

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படம் தற்போதே பலகோடி லாபம் பார்த்துவிட்டதாம்.

PREV
14
படமே ரிலீஸ் ஆகல அதற்குள் இத்தனை கோடி லாபமா? டிராகன் படத்திற்கு அடித்த ஜாக்பாட்
டிராகன் படத்துக்கு அடித்த ஜாக்பாட்

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தன்னுடைய இரண்டாவது படமான லவ் டுடே மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அதில் ஒன்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றொன்று டிராகன்.

24
ஹீரோவாக பிசியான பிரதீப்

இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் அவர் கைவசம் உள்ள மற்றொரு படமான டிராகன் திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார் இப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்.... தல வந்தா தள்ளிப்போய் தான் ஆகணும்; டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

34
டிராகன் படத்தின் பிசினஸ்

டிராகன் திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், தற்போதே அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் சூடுபிடித்துள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.14 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாம். இதுதவிர இப்படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.6 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.6 கோடிக்கும் விற்கப்பட்டிருக்கிறதாம். இதன்மூலம் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.26 கோடி வசூலித்துவிட்டதாம். படத்தின் பட்ஜெட்டைவிட இது அதிகம் என கூறப்படுகிறது.

44
தனுஷ் உடன் மோதும் டிராகன்

டிராகன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனிருத் மற்றும் சிம்பு பாடிய பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.... ஏண்டி விட்டு போன; சிம்புவின் லேட்டஸ்ட் Soup சாங் புரோமோ

Read more Photos on
click me!

Recommended Stories