உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்சியில் யாரும் எதிர்பாராத போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் விசித்ரா. பைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், 98-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தன்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவரை பார்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரபல நடிகர் ஒருவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும், அதற்க்கு நான் உடன்படாததால், ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலரை ஏவி என்னை அடித்ததாக இவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.