ராம் சரணினின் 'கேம் சேஞ்சர்' OTT ரிலீஸ் எப்போது; எங்கே பாக்கலாம்?

First Published | Jan 10, 2025, 5:36 PM IST

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்‌ஷன் படமான 'கேம் சேஞ்சர்' எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.
 

Game Changer Get Positive Reviews

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் ஆக்‌ஷன் படமான 'கேம் சேஞ்சர்' இன்று, ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் கதைக்களம், அதிரடி காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து, OTT வெளியீடு குறித்த செய்திகள் ஆன்லைனில் பரவத் தொடங்கியுள்ளன.

Game Changer OTT Release

அதன்படி,  இந்தப் படம் பிரத்தியேகமாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி இன்னும் படத்தயாரிப்பாளர்களால் வெளியிடப்படவில்லை.  ஆனால் பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் இப்படம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. நேர்மையான IAS அதிகாரி ஒருவர் நியாயமான தேர்தல்கள் மூலம் அரசியல் ஊழலை எதிர்த்துப் போராடி, ஆட்சியை மாற்றியமைக்கும் கதை தான் இந்த படத்தின் மைய கரு. அமேசான் பிரைம் வீடியோ தங்கள் X பக்கத்தில் ஒரு இடுகை மூலம் OTT வெளியீட்டை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் ஸ்ட்ரீமிங் உரிமையை ரூ.105 கோடிக்கு அந்த நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

புகைப்பழக்கம் - மதுவை நிறுத்தியது எப்படி? விஷால் கூறிய ஆச்சர்ய தகவல்!

Tap to resize

Ram Charan Play a Duel Role in Game Changer

'கேம் சேஞ்சர்' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ ஸ்டுடியோஸ் பெற்றுள்ளதாக பிங்க்வில்லா தெரிவித்துள்ளது. IAS அதிகாரியாக இருக்கும் ராம் சரண், ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பை எப்படி மாற்றி அமைதிக்கிறார் என்பதைவை எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஷங்கர் இயக்கி உள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தில், SJ சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகியுள்ளது.
 

Pushpa Director Sukumar About Game Changer

கேம் சேஞ்சர் படம் குறித்து, 'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார், டல்லாஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் படம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். சிரஞ்சீவியுடன் படத்தைப் பார்த்ததாகவும், முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்ததாகவும், இடைவேளை ஒரு பிளாக்பஸ்டர் தருணம் என்றும் குறிப்பிட்டார். இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் எபிசோட் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், தனக்கு மெய்சிலிர்த்ததாகவும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் EX காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்; விஷால் காதில் சொன்னது இது தான்! அன்ஷிதா ஓபன் டாக்!

Ram charan next movie

ராம் சரண் தனது அடுத்த ப்ராஜெக்ட்டான, RC16 படத்தில் இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் பணியாற்றி வருகிறார். இதில் ஜான்வி கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கியாரா அத்வானி, ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் NTR உடன் 'வார் 2' படத்தில் நடிக்கிறார். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 2025 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest Videos

click me!