Atlee
ராஜா ராணி படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அடுத்தடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹாட்ரிக் படங்களை இயக்கினார். இந்த நான்கு படங்களும் வரிசையாக ஹிட் அடித்ததை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு முதல் படமே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தியது.
Director Atlee
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலேயே செட்டில் ஆன அட்லீ, அங்கு அடுத்ததாக சல்மான் கானை வைத்து படம் இயக்க உள்ளார். இதுதவிர அங்கு படத்தயாரிப்பிலும் பிசியாகி இருக்கிறார். அதன்படி பேபி ஜான் என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக எண்ட்ரி கொடுத்தார் அட்லீ. இப்படத்தில் வருண் தவான் நயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். அவர் பாலிவுட்டில் நடித்த முதல் படம் இதுவாகும்.
இதையும் படியுங்கள்.... 'பேபி ஜான்' படத்தில் கீர்த்திக்கு சிபாரிசு செய்தது இந்த டாப் ஹீரோயினா? அவரே பகிர்ந்த சீக்ரெட்!
Atlee produced Movie
பேபி ஜான் திரைப்படம் கடந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ரிலீஸ் ஆனது. இது நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடியை கூட வசூலிக்கவில்லை. இப்படத்தால் அட்லீக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Shahid Kapoor
இதனால் அவர் படத்தயாரிப்பை கைவிட உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னுடைய அடுத்த பட தயாரிப்பை விரைவில் அறிவிக்க உள்ளாராம் அட்லீ. அதன்படி அட்லீ பாலிவுட்டில் தயாரிக்க உள்ள இரண்டாவது படத்தில் நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். பேபி ஜான் படம் ரீமேக் செய்து பலத்த அடி வாங்கியதால், ஷாகித் கபூர் நடிக்கும் படத்தை ரீமேக் படமாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் அட்லீ.
இதையும் படியுங்கள்.... போட்ட காசெல்லாம் போச்சு; பேபி ஜான் படத்தால் அட்லீக்கு இத்தனை கோடி நஷ்டமா?