ரஜினிக்கு போட்டியாக வரும் ரித்திக் ரோஷன்: கூலியுடன் சண்டை போடும் வார் 2: எப்போது ரிலீஸ் தெரியுமா?

Published : Jan 10, 2025, 02:36 PM IST

Rajinikanth Coolie Movie Clash With Hrithik Roshan War 2 : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திற்கு போட்டியாக ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 படம் வெளியாக இருப்பதாக் தகவல் வெளியாகியிருக்கிறது.

PREV
15
ரஜினிக்கு போட்டியாக வரும் ரித்திக் ரோஷன்: கூலியுடன் சண்டை போடும் வார் 2: எப்போது ரிலீஸ் தெரியுமா?
Rajinikanth Coolie Clash With Hrithik Roshan War 2

Rajinikanth Coolie Clash With Hrithik Roshan War 2 : வருடத்திற்கு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வரும் ரஜினிகாந்த், இப்போது இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். கபாலி, காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்த ரஜினிக்கு கடைசியாக கடந்த ஆண்டு வேட்டையன் படம் வெளியானது. இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகினி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

25
Coolie Movie Release Date, Coolie August 14 Release

முழுக்க முழுக்க போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

35
Hrithik Roshan, Kiara Advani, War 2 August 14 Release

கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரேபா மோனிகா ஜான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 72 சதவிகிதம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்ற தகவல் வெலியாகியிருக்கிறது. அதன்படி கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

45
Coolie August 14 Release, War 2, War 2 Release Date

இதுவரையில் ரஜினியின் எந்த படமும் ரூ.1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்காத நிலையில் கூலி படம் ரூ.1000 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படமும் ஆகஸ்ட் மாதம் தான் திரைக்கு வந்து ஹிட் கொடுத்தது. அதே போன்று இந்தப் படத்தையும் படக்குழுவினர் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

55
Rajinikanth, Coolie, Coolie Movie Release Date

இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்கு போட்டியாக வார் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அயான் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தின் 2ஆம் பாகமும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் வார் 2 படமும் ஒன்று.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories