
பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு தியேட்டரில் அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதிலும் இன்று ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், ஷான் நிகம் நடித்த மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. தியேட்டரில் புதுப்படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆனதை போல் பொங்கல் விருந்தாக ஓடிடியிலும் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிஸ் யூ
சித்தார்த் நாயகனாக நடித்த படம் மிஸ் யூ. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக ரிலீஸ் ஆன இது பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில், மிஸ் யூ திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
அதோமுகம்
சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அதோமுகம். அருண் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இசையமைப்பாளராக சரண் ராகவன் பணியாற்றியுள்ள இப்படத்தை ஆண்டோ கஜன் பிரான்சிஸ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பான திரில்லர் கதையசம் கொண்ட இப்படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஷங்கரின் பாலிடிக்ஸ் ஒர்க் அவுட் ஆனதா? கேம் சேஞ்சர் முழு விமர்சனம் இதோ
சீன் நம்பர் 62
ஆடம் ஜமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் சீன் நம்பர் 62. விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிகேவி இசையமைத்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஈஸ்வர மூர்த்தி கவனித்துள்ளார். வேனு ஜி ராம் இப்படத்தை தயாரித்து உள்ளார். இப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகி உள்ளது.
வேற மாறி ட்ரிப்
ஜஸ்வினி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் தான் வேற மாறி ட்ரிப். இந்த வெப் தொடரில் ரவீனா தாஹா, ஜெய்சீலன், விஜே பப்பு, சப்னா, ஷமிதா, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை ஆர்.ஜே.சிவகாந்த் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
மற்ற மொழி படங்கள்
மலையாளத்தில் நஸ்ரியா நடித்த Sookshmadarshini திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது. அதேபோல் தெலுங்கில் பொட்டல் திரைப்படம் அமேசான் பிரைமிலும், பிரேக் அவுட் படம் ஈடிவி வின் தளத்திலும் வெளியாகி உள்ளது. கன்னடத்தில் துருவத்தாரே படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் சபர்மதி ரிபோர்ட், நெட்பிளிக்ஸ் தளத்தில் பிளாக் வாரண்ட் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. ஆங்கிலத்தில் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கானிங் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 11ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்; 10 வருஷமா ஒரு ஹிட் கூட இல்ல - ஷங்கர் பார்ம் அவுட் ஆனது ஏன்?