
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்காததால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருத்திகா, அங்கு சென்று முதல் எபிசோடிலேயே அனைவரையும் இம்பிரஸ் செய்துவிட்டார். குறிப்பாக சல்மான் கானே இந்தி பிக் பாஸில் வியந்து பார்த்த ஒரு போட்டியாளர் என்றால் அது ஸ்ருத்திகா தான். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் தமிழ் பெண்ணும் ஸ்ருத்திகா தான். இவர் அந்நிகழ்ச்சியில் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷனில் எலிமினேட் ஆனார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சல்மான் கானே வியந்து பாராட்டும் அளவுக்கு உயர்ந்த ஸ்ருத்திகா யார் என்பதை தற்போது பார்க்கலாம். இவர் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் ஸ்கூல் படிக்கும்போதே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் ஸ்ரீ. இப்படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் நடிக்கும்போது நடிகை ஸ்ருத்திகாவுக்கு வெறும் 15 வயது தானாம்.
ஸ்ரீ படத்தை தொடர்ந்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, மலையாளத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்தார். இந்த படங்கள் அனைத்துமே அட்டர் பிளாப் ஆகின. இதனால் சினிமாவை விட்டே விலகிய ஸ்ருத்திகா, தொழிலதிபரான அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார். 2003ம் ஆண்டுக்கு பின் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஸ்ருத்திகா, கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு ஸ்ருத்திகா வெளியிட்ட வீடியோ! என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி கலக்கிய ஸ்ருத்திகா, அதில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தில் டைட்டிலையும் ஜெயித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜெயித்ததற்காக ஸ்ருத்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் அந்த பணத்தை குழந்தைகளின் கல்விக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டும் கிடைத்தது.
இதையடுத்து தான் தற்போது இந்தி பிக் பாஸில் கலந்துகொண்டதன் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் ஸ்ருத்திகா. இவருக்கு இந்தி பிக் பாஸில் கலந்துகொண்டதற்காக ஒரு வாரத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாம். நடிகை ஸ்ருத்திகா நடிப்பை தாண்டி ஒரு தொழிலதிபராகவும் ஜொலித்து வருகிறார். இவர் சொந்தமாக அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதோடு, தனக்கென ஒரு தனி துணி பிராண்டையும் வைத்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. நடிகை ஸ்ருத்திகாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்...டைட்டில் கனவோடு இருந்தவரை மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற்றிய பிக் பாஸ்!