
Game Changer Disappointed Producer Dil Raju : தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் இப்போது தன்னுடைய 69ஆவது படமான தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் விஜய் காம்பினேஷனில் உருவாகும் முதல் படம் இது. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பிரியாமணி, நரைன், மோனிஷா பிளெஸ்ஸி, மமிதா பைஜூ, தீஜே அருணாச்சலம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம் வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரைக்கு வந்த படம் வாரிசு. இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் உருவான இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா, விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
ஷங்கரின் பாலிடிக்ஸ் ஒர்க் அவுட் ஆனதா? கேம் சேஞ்சர் முழு விமர்சனம் இதோ
குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.280 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.310 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. எனினும் தெலுங்கில் இந்தப் படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.27.21 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ வாரிசு தெலுங்கு சினிமாவில் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாகவும், இதனால், கேம் சேஞ்சர் படத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
அதோடு கேம் சேஞ்சர் படம் மூலமாக கம்பேக் கொடுப்போம் என்றும் கூறினார். இந்த நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் 3 வேடங்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்போது திரைக்கு வந்துள்ளது. இன்று வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ராம் நந்தன் (ராம் சரண்) நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி. தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு வருகிறார். அவர் நேர்மையாக இருப்பதால் ஊழல்வாதியான அமைச்சர் பாப்பிலி மோப்பிதேவிக்கு (எஸ்ஜே சூர்யா) பிடிக்கவில்லை. இதனால், தனது செயலுக்கு தடையாக இருக்கும் ராம் நந்தனை ஒழிக்க திட்டமிடுகிறார்.
அதிகாரத்திற்காக தனது தந்தையான ஆந்திர முதல்வர் சத்தியமூர்த்தியையே (ஸ்ரீகாந்த்) கொல்ல துணிகிறார். ஆனால் மகனை நன்கு அறிந்த சத்தியமூர்த்தி, எதிர்பாராத விதமாக ராம் நந்தனை தனது வாரிசாக அறிவிக்கிறார். இது மோப்பிதேவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதோடு ராம் நந்தன் முதல்வராக வருவதை தடுத்து நிறுத்தி மோப்பிதேவி (எஸ்ஜே சூர்யா) முதல்வராகிறார்.
இதையடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதை. இது போன்று எத்தனையோ கதைகள் தமிழ் சினிமாவில் வந்ததால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ரசிகர்கள் பலரும் பலவிதமாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் வாரிசு படத்தை பெரிதாக நம்பி தெலுங்கு வசூலில் ஏமாந்த தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு கேம் சேஞ்சர் படமானது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வந்த இந்தியன் 2 படம் பெரியளவில் தோல்வியை கொடுத்த நிலையில் இப்போது கேம் சேஞ்சர் படமும் ஏமாற்றம் அளித்துள்ளது.