
நடிகர் விஷால் சமீபத்தில் கலந்து கொண்ட 'மத கஜ ராஜா' பட விழாவில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உடல்நலம் குன்றி காணப்பட்டார். இந்நிலையில் தான் இவரைப் பற்றி, தற்போது அவருடைய நண்பர்களில் ஒருவரான ஜெயம் ரவி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, இதுவரை சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களில் ஆக்சன் நாயகனாக, தன்னுடைய அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியவர் விஷால். கடந்த 2023 ஆம் ஆண்டு, இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சுமார் ரூ.100 கோடி வசூலை குவித்தது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த 'ரத்தினம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில் நடிகர் விஷால், கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் நடித்து முடித்த காமெடி மற்றும் ஆக்ஷன் ஜார்னரில் உருவான 'மத கஜ ராஜா' திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்னர் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிக்க, சந்தானம் காமெடி ரோலில் நடித்துள்ளார். பட தயாரிப்பாளர்கள் சில பண ரீதியான பிரச்சனைகளை சந்தித்ததன் காரணமாக, இப்படம் ரிலீஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
முதல் நாளே 200 கோடி வசூல் கன்ஃபார்ம்; ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி, இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும், இன்றைய ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சோனு சூட், மணிவண்ணன், சுபா ராஜு, நித்தின் சத்யா, மனோபாலா, ஜான் கொக்கென், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும், சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஷால் உடல்நலம் குன்றி காணப்பட்டார். விஷாலின் முகங்கள் வீங்கி, உடல் இளைத்து, கை நடுக்கத்தோடு இருந்த இவரின் தோற்றம் அவரின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில், பல ரசிகர்கள் விஷால் மீண்டும் பூரண நலம் பெற... பல்வேறு கோவில்களில் பூஜை செய்து வருகிறார்கள். அதே போல் திரையுலக பிரபலங்களும் விஷாலுக்கு தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
85-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மாயக்குரல் மன்னன்; கே.ஜே.யேசுதாஸின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
இது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் பல யூ டியூபர்கள் விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் அவருக்கு இருந்த கெட்ட பழக்கம் தான் என் கூறி வருகிறார்கள். விஷாலை இந்த நிலைமைக்கு ஆளாகியவர் இயக்குனர் பாலா தான் என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 'அவன் இவன்' படத்தில் நடித்த போது மாறுகண் வேண்டும் என்பதற்காக, விஷாலின் கண்களை பாலா தைக்க கூறியதன் விளைவாக விஷாலுக்கு தீராத ஒற்றை தலைவலி ஏற்பட்டது. தலைவலியை மறக்க விஷால் சில தவறான பழக்கங்களுக்கு அடிமையானதாகவும் கூறப்பட்டன. ஆனால் விஷால் தரப்பு முழுமையாக இதுபோன்ற தகவலை மறுத்துள்ள நிலையில், வைரல் காய்ச்சல் காரணமாகவே விஷால் இப்படி உள்ளதாகவும் கூறிய விரைவில் நலம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய தன்னுடைய பேட்டி ஒன்றில்... விஷால் உடல்நிலை குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துளளார். விஷால் பற்றி அவர் கூறுகையில்... "விஷால் மறுபடியும் சிங்கம் போல் மீண்டு வருவான். விஷாலுக்கு இப்போது போதாத காலம். கெட்ட நேரம் என்று வேணா சொல்லலாம். ஆனால் விஷாலை விட ஒரு தைரியசாலி கிடையாது. அந்த தைரியம் அவனை காப்பாற்றும் .அவன் நிறைய பேருக்கு உதவி செஞ்சிருக்கான். அவன் நல்ல மனசுக்கு அவன் சீக்கிரம் மறுபடியும் சிங்கம் மாதிரி வருவான் என கூறியுள்ளார். அதே நேரம் விஷால் இப்படி மாற அவரின் கேட்ட நேரமும் - போதாத காலமும் என ஜெயம் ரவி கூறிய கருத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அஜித்தின் ரேஸ் கார் பலத்த சேதமடைந்தும் ஒரு காயம் கூட இல்லாமல் அவர் தப்பியது எப்படி?