
துபாயில் நடைபெற உள்ள 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் பங்கேற்க உள்ளார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, கடந்த சில தினங்களுக்கு முன், அவரது கார் ஒரு பந்தயப் பாதையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. கார் பலத்த சேதமடைந்தாலும், அஜித் எந்த ஒரு காயமும் இன்றி மீட்கப்பட்டார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித் குமார் ரேசிங் என்ற பந்தய அணியை சொந்தமாக வைத்துள்ளார். இதை அவர் செப்டம்பர் 2024-ல் தொடங்கிய நிலையில், தற்போது கலந்து கொள்ளும் Porsche 992 போட்டி மட்டும் இன்றி, ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். தற்போது அஜித் பயிற்சி எடுத்து வரும் கார் ரேஸ், ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 13 ஆம் தேதி முடிவடையும்.
இதை தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்கிறார். அவை முடிவடைய சுமார் 9 மாதங்கள் உள்ளது. எனவே இந்த 9 மாதங்களும், எந்த ஒரு படப்பிடிப்பிலும் பங்கேற்க மாட்டேன் என அஜித் தற்போது கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் கார் ரேஸில், எந்த வயதில் ஆர்வம் ஏற்பட்டது என்பது குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி 18 வயதில் இருந்தே... கார் ரேஸில் ஆர்வம் இருந்ததாகவும், 2002-ஆம் ஆண்டில் இருந்து கார் ரேஸில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, 2003 மற்றும் 2004-ல் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மற்ற பணிகளிலும் கவனம் செலுத்தியதால், கார் ரேஸில் முழுமையான கலந்து கொள்ள முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
ராம் சரணினின் 'கேம் சேஞ்சர்' OTT ரிலீஸ் எப்போது; எங்கே பாக்கலாம்?
அதே போல் அடுத்தடுத்து பங்கேற்க உள்ள ரேஸ் தொடர்கள் முடியும் வரை 9 மாதங்கள், எந்த ஒரு படத்திலும் நடிக்க போவதில்லை என்கிற தகவலையும் அஜித் பகிர்ந்து கொண்டுள்ளார். திரைப்படங்களில் நடித்ததால் தான் சில காலம், கார் ரேஸில் பங்கேற்க முடியாமல் போனது என தன்னுடைய பேட்டியில் அஜித் தெரிவித்துள்ளார்.
அஜித் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தற்போது. தற்போது கார் ரேஸில் பங்கேற்க உள்ளதால், அதில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளார். எனவே கார் ரேஸ் முடிந்த பின்னரே, அஜித் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' திரைப்படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லீ' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் என விலகியதால், இன்னும் விடாமுயற்சி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. மேலும் அஜித் நடித்துள்ள மற்றொரு படமான 'குட் பேட் அக்லீ' வரும் கோடை நாட்களை குறிவைத்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் கொடுத்துள்ள இந்த பேட்டியை தொடர்ந்து ரசிகர்கள் பலர் நீங்க கார் ரேஸில் கலக்குங்க தல என தங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அஜித் தன்னுடைய அடுத்த படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அல்லது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியான நிலையில், படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும், அவை இன்னும் 9 மாதங்களுக்கு பின்னரே வெளியாகும் என்பது அஜித்தின் இந்த பேட்டி மூலம் தெளிவாகிறது.
என் EX காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்; விஷால் காதில் சொன்னது இது தான்! அன்ஷிதா ஓபன் டாக்!