Vettaiyan Box Office Collection : த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ரிலீஸ் ஆகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் வேட்டையன். இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் ஜெய் பீம், கூட்டத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு சென்சேஷனல் மியூசிக் டைரக்டரான அனிருத் இசையமைத்து உள்ளார். வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
25
Vettaiyan Movie
வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், ரக்ஷன், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வேட்டையன் படத்தில் நடித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. பொதுவாக ரஜினி படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும். அப்படி வேட்டையன் படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
அந்த வகையில் முதல் நாளில் இப்படம் உலகளவில் 77.90 கோடி வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.65 கோடி வசூலித்து இருந்த இப்படம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 4.89 கோடியும், கர்நாடகாவில் 7.90 கோடியும், கேரளாவில் 4.72 கோடியும், இதர மாநிலங்களில் 2.34 கோடியும், வெளிநாடுகளில் 32.40 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 77.90 கோடி கலெக்ஷன் அள்ளி இருந்தது.
45
Vettaiyan Breaks GOAT Movie Record
இரண்டாம் நாளில் உலகளவில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை கடந்துள்ள வேட்டையன் படம் மற்றுமொரு மாஸ் சாதனையையும் படைத்துள்ளது. அதன்படி புக் மை ஷோவில் இரண்டாம் நாளில் அதிக டிக்கெட் விற்பனையான படங்கள் பட்டியலில் கோட் பட சாதனையை வேட்டையன் முறியடித்து இருக்கிறது. கோட் படத்திற்கு 2ம் நாளில் 3 லட்சத்து 94 ஆயிரம் டிக்கெட் விற்பனை ஆகி இருந்த நிலையில், வேட்டையன் படத்திற்கு 35 ஆயிரம் டிக்கெட் கூடுதலாக விற்பனை ஆகி உள்ளது. அதாவது 4 லட்சத்து 29 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்து கோட் பட சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கி இருக்கிறது வேட்டையன்.
55
Vettaiyan Box Office Collection
முதல் நாளில் ரூ.77.90 கோடி வசூலித்திருந்த வேட்டையன் திரைப்படம் இரண்டாம் நாளான நேற்று ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து வசூல் வேட்டையாடி இருக்கிறது. இப்படம் இரண்டாம் நாளில் ரூ.45.26 கோடி வசூலித்து இதுவரை உலகளவில் ரூ.123.16 கோடி வசூலித்தி இருக்கிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வேட்டையன் பட வசூல் மேலும் ஜெட் வேகத்தில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.