
Super Hit Tamil Movies Without Songs in Tamil Cinema: சினிமா உலகத்தில் கதை, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்கள், அந்த கேரக்டருக்கு ஏற்ப பாடல்கள், சண்டைக் காட்சிகள் என்று எல்லாம் இருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள், கொரியோகிராஃபர் என்று எல்லோருமே தேவைப்படுவார்கள். ஆனால், வெறும் கதையும் கதாநாயகனும் கொண்ட படம் படத்திற்கு இசையமைப்பாளர்களோ, கொரியோகிராஃபர்களோ தேவையில்லை.
சினிமாவில் ஒரு பாடல் காட்சி கூட இல்லையென்றால் இசையமைப்பாளர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி இப்போது எழுகிறது. அப்படி பாடல் காட்சிகளே இல்லாமல் இருந்திருந்தால் கவிஞர் வாலி, கண்ணதாசன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, எஸ் பி பாலசுப்பிரமணியம், பாடலாசிரியர்கள், பின்னணி பாடகர்கள் என்று யாருமே வந்திருக்க முடியாது.
ஆனால், பாடல் இல்லாத படம் திரைக்கு வந்து வெற்றி கொடுத்திருக்கிறது. அதற்கு உதாரணமே கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த கைதி படம் தான். ஆனால், அதற்கு முன்னதாக சில படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. அந்தப் படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க…
1954ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாடல்கள் இல்லாமல் திரைக்கு வந்த திகில் படம் ”அந்த நாள்”. இயக்குநர் எஸ் பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், ஜவர் சீதாராமன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இயக்குநர் எஸ் பாலசந்தர் ஒரு வீணைக் கலைஞர், இசையமைப்பாளர், நடிகர் என்று பல துறைகளில் வித்தகர். கதையை மட்டுமே நம்பி பாடல்கள் இல்லாமல் வெளியிட்டு ஹிட் கொடுத்தவர்.
இதே போன்று தான் கமல் ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளரான மகேஷ் மகாதேவன் விளம்பரம் உள்பட 250 படங்களுக்கு இசையமைத்துள்ளார். நம்மவர் இவரது இசையில் வந்த படம். இந்தப் படத்திற்கு தேசிய விருதே கிடைத்தது. மேலும், குருதிப்புனல், ஆளவந்தான், வானம் வசப்படும் ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதில் வாசம் வசப்படும் படமே இவர் இசையமைத்த கடைசி படம்.
குருதிப்புனல் படத்தில் பாடல்கள் இல்லாமல் இசையமைத்து கொடுத்திருப்பார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கேன்சரால் பாதிக்கப்பட்டு மகேஷ் மகாதேவன் இறந்தார். இதையடுத்து நண்பர்கள் ஒன்றிணைந்து மகேஷ் மெமோரியல் டிரஸ்ட் என்ற அமைப்பை நடத்தி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது இளையராஜாவின் இசை தான். அன்னக்கிளியில் ஆரம்பித்து தற்போது வரையில் சினிமா உலகை ஆண்டு வருகிறார். சாங்ஸ் மட்டுமின்றி இளையராஜா பின்னணி இசையிலும் ராஜா தான். வீடு, ஹவுஸ்புல், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்கள் இளையராஜாவின் இசைக்காகவே ஹிட் கொடுத்த படங்கள்.
ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவை சிறப்பாக இருந்தால் ஒரு படத்திற்கு பாடல்கள் என்பது அவசியமில்லை. மேலும் பின்னணி இசை மட்டும் கச்சிதமாக இருந்தால் போதும். பின்னணி இசையே ஒரு படத்திற்கு உயிர் கொடுத்துவிடும்.
1. கைதி - சாம்
2. விசாரணை- ஜி வி பிரகாஷ்
3. ஆரண்ய காண்டம் - யுவன் சங்கர் ராஜா
4. உன்னைப்போல் ஒருவன்- ஸ்ருதிஹாசன்
ஆகிய படங்கள் பின்னணி இசைக்காகவே ஹிட் கொடுத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களில் பாடல்கள் என்று எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்திற்கு உயிர் கொடுப்பது கதையா, பாடலா என்று கேட்டால், கதை மட்டுமே ஒரு படத்திற்கு உயிரூட்டும். ஆனால், அதற்கும் பின்னணி இசை அவசியம்.