
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். மேலும் ரஜினிகாந்த்தையே மிரட்டும் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அசத்தி இருந்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரஜினிகாந்துக்கு அப்பாவாகவும், லக்ஷ்மி அம்மாவாகவும் நடித்திருந்தார். இவர்களைத் தவிர சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, மன்சூர் அலிகான், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தது.
இந்தத் திரைப்படம் வெளியாகி சுமார் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய நிலையில், இந்த திரைப்படம் ஒருவேளை ரஜினிகாந்தின் ஐடியாவை கேட்டிருந்தால், பிளாப் ஆகி இருக்கும் என்றும், ஆனால் அப்படி நடக்காமல் காப்பாற்றியது நடிகர் கமலஹாசன் தான் என அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வினை ஆனது! பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை - முட்டி மோதும் போட்டியாளர்கள்!
படையப்பா படப்பிடிப்பு முடிந்த பின்னர் பின்னர், ரஜினிகாந்துக்கு... கே எஸ் ரவிக்குமார் படத்தை போட்டு காட்டியுள்ளார். மொத்தம் இருந்த 19 ரீல்களையும் பார்த்துவிட்டு எல்லாமே நன்றாக இருக்கிறது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் ஒரு படத்தில் 14 ரீல்ஸ் தான் இருக்க வேண்டும். எனவே இந்த படத்தின் காட்சிகளை மீண்டும் குறைத்து கிரிஸ்ப்பாக மாற்ற வேண்டும் என, கே எஸ் ரவிக்குமார் கூற... இதற்கு ரஜினிகாந்த் அதை பார்த்துக் கொள்ளலாம் என கூறியதோடு, படத்தில் எல்லா சீனுமே நல்லாதானே இருக்கு எதற்கு காட்சிகளை நீக்க வேண்டும் என கே.எஸ்.ரவிகுமாரிடம் விவாதம் செய்வது போல் பேசியுள்ளார்.
பின்னர், ஆனால் கொஞ்சம் நேரம் ஆன மாதிரி இருக்கு, டைம் என்ன என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். இதற்க்கு கே எஸ் ரவிக்குமார் டைம் எதுக்கு சார் பாக்கணும். இதுல மொத்தம் 19 ரிலீஸ் இருக்கு... என கூறி ஐந்து ரீல்களை படத்தில் இருந்து குறைக்க வேண்டும் என மீண்டும் கூறியதற்கு, "19 ரீலிஸ் எல்லாம் தாங்காதே... என யோசித்தபடியே, வேண்டுமென்றால் 2 இன்டர்வெல் விட்டுவிடலாமா என கேட்டுள்ளார். இதற்கும் கே எஸ் ரவிக்குமார் அதெல்லாம் வேண்டாம் சார், என மறுத்து பேச அதற்கு ரஜினிகாந்த் ரீசண்டாக ஒரு ஹிந்தி படத்தில் கூட இரண்டு இன்டர்வெல் இருந்தது என படத்தில் உள்ள காட்சிகளை நீக்க மனம் இல்லாமல் பேசினாராம்.
சுச்சுவேஷன் தெரியாமல்.. சோக பாட்டை சிரித்து கொண்டே பாடிய SPB! எந்த பாடல் தெரியுமா?
இதைத் தொடர்ந்து கமலஹாசன் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு பேசியபோது, ரஜினிகாந்த் 19 ரீல்கள் 'படையப்பா' படத்தில் உள்ளதையும், இயக்குனர் இரண்டு இன்டர்வல் வேண்டாம் எனக் கூறி... படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என சொல்கிறார் என கூறியதாக தெரிவித்துள்ளார். உடனே கமல்ஹாசன் இயக்குனர் சொல்வதை கேட்கும் படியும், தமிழ் படத்திற்கு இரண்டு இன்டர்வெல் கான்செப்ட் ஒத்து வராது என்கிற எதார்த்தத்தை கூறி ரஜினிக்கு புரிய வைத்தாராம்.
இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மறுநாள் இயக்குனர் ஏ எஸ் ரவிக்குமாரை சந்தித்து, படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க சம்மதம் என தெரிவித்துள்ளார். பின்னர் ரஜினிகாந்திடம் நான்கு நாட்கள் டைம் வாங்கி இரவு பகலாக 19 ரீலிஸாக இருந்த 'படையப்பா' படத்தை 14 ரீலிசாக மாற்றி, பின்னர் இந்த படம் வெளியானது. எனவே இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கமலஹாசன் தான் என்றும், ரஜினிகாந்த் சொன்னது போல் ஒரு வேலை இரண்டு இன்டர்வெல் விட்டு 19 ரீல்ஸையும் படமாகக் கொண்டு வந்திருந்தால் படு தோல்வியை சந்தித்திருக்கும் என கூறியுள்ளார்.
காசு கொடுத்து வாங்குறதுக்கு சமம்; கோவத்தின் உச்சத்தில் தேசிய விருதை மறுத்த வாலி!