அட்ட பிளாப் படத்தையும் தூக்கி நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை; பாட்டுக்காகவே கொண்டாடப்பட்ட படங்கள் எது?

First Published | Oct 11, 2024, 5:54 PM IST

Fans Celebrated AR Rahman Songs: இயக்குநர் கேஎஸ் ரவி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த என் சுவாசக் காற்றே திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இருப்பினும், ஏ.ஆர். ரஹ்மானின் இசை மட்டும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

AR Rahman Music, En Swasa Kaatre Songs, Arvind Swamy, Isha Koppikar, KS Ravi,

ரோஜாவில் ஆரம்பித்து புதிய முகம், கிழக்கு சீமையிலே, காதலன், முத்து என்று வரிசையாக சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ராயன் படத்தில் வந்து நிற்கிறார். இவரது பயணம் இதோடு முடியப்போவதில்லை, இன்னும் தொடர்ந்து கொண்டே இருப்பார். ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள்.

படத்தோடு சேர்த்து பாட்ம் ஹிட் கொடுத்ததும் உண்டு, பாட்டுக்காக படம் ஹிட்டடித்ததும் உண்டு, படம் பிளாப் ஆனாலும், பாட்டை மட்டுமே கொண்டாடிய சம்பவங்களும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என்று பல மொழிகளில் 145கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு பாடல்களும் பாடியுள்ளார்.

En Swasa Kaatre Songs, AR Rahman Music, Arvind Swamy, Isha Koppikar, KS Ravi,

என் சுவாசக் காற்றே:

இயக்குநர் கேஎஸ் ரவி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் என் சுவாசக் காற்றே. நடிகர் அரவிந்த் சாமி, இஷா கோபிகர், பிரகாஷ் ராஜ், ரகுவரன், வடிவேலு, தலைவாசல் விஜய் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். திருடன் போலீஸ் போன்று ஒரு கதையை மையப்படுத்திய இந்த படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.

Tap to resize

AR Rahman, En Swasa Kaatre Movie Songs, Arvind Swamy, Isha Koppikar, KS Ravi,

எனினும், இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்து கொடுத்த வாலி மற்றும் வைரமுத்து வரிகளில் ரஃபீ, பாலக்காட்சு ஸ்ரீராம், ஹரினி அனுபமா, உன்னிகிருஷ்ணன், கேஎஸ் சித்ரா, எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் பலர் பாடிய ஜூம்பலக்கா, காதல் நிகரா, திறக்காத காட்டுக்குள்ளே, என் சுவாசக் காற்றே, சின்ன சின்ன மழை துளிகள், தீண்டாய் மெய் தீண்டாய் ஆகிய பாடல்களை ரசிகர்கள் இன்றும் ரசிக்கிறார்கள்.

இதற்கு ஒரே காரணம் ஏஆர் ரஹ்மான் இசை. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மட்டும் இசை அமைக்காமல் இருந்திருந்தால் இந்தப் படம் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போயிருக்கும்.

En Swasa Kaatre - AR Rahman, Arvind Swamy, Isha Koppikar, KS Ravi,

A. R. ரஹ்மான் இசையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் கேட்பதற்கு மிக அற்புதமாக இருக்கும்.ஆனால் இந்த படமோ அதற்கு நேர் எதிராய் மிக மோசமாக சலிப்பை தரும் காட்சிகளை கொண்டிருக்கும்.மிக பெரிய தோல்வி அடைந்த இந்த படத்தில் பாடல்கள் மட்டுமே மக்கள் மனதில் இன்று வரை நிற்கின்றது.

Paarvai Ondre Pothume - Bharani

இதே போன்று தான் பார்வை ஒன்றே போதும் படமும். இயக்குநர் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் குணால் மற்றும் மோனல் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பார்வை ஒன்றே படமும் நன்றாக ஓடியதாக நினைவில் இல்லை என்றாலும் பரணி இசையில் வந்த பாடல்களுக்கு  ப விஜய் மற்றும் பரணி இருவரும் எழுதியிருக்கின்றனர். இந்தப் படத்தில் உள்ள துளி துளியாய் கொண்டு மழை துளியாய், காதல் பண்ணாதீங்க, நீ பார்த்துட்டு போனாலும், திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு, திரும்ப திரும்ப பார்த்து பார்த்து, என் அசைந்தாடும் என்று எல்லா பாடல்களுமே ஹிட்.

Latest Videos

click me!