ரஜினி, கமலுடன் நடிக்க மாட்டேன்; அப்போவே பல கண்டிஷன் போட்ட டாப் கோலிவுட் நடிகை - யார் அவங்க தெரியுமா?

First Published | Oct 11, 2024, 4:51 PM IST

Rajini and Kamal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கடந்த 50 ஆண்டுகளாக அசத்தி வரும் இருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.

Kamalhaasan

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத மாபெரும் நடிகர்களாக திகழ்ந்து வரும் இருவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 1975ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்கின்ற திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து நடித்து தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் ரஜினிகாந்த். அதுவரை தமிழ் திரையுலகை பொருத்தவரை சற்று நிறம் கூடுதலாக உள்ளவர்கள் மட்டுமே பெரிய ஹிட் நடிகர்களாக மாற முடியும் என்கின்ற ஒரு பிம்பம் இருந்தது. 

ஆனால் அதை சுக்கு நூறாக உடைத்து கருமையும் அழகு தான், திறமை மட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த ரஜினிகாந்தே பல மேடைகளில் வியந்து பாராட்டி, தன்னுடைய கலை உலக அண்ணன் என்று குறிப்பிட்ட ஒரு மெகா நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்களுடைய காலத்திற்குப் பிறகு எத்தனையோ நடிகர்கள் தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை வகித்து வந்தாலும், இங்க நாங்க தான் கிங்கு என்று சொல்வது போல கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இந்த இரண்டு ஜாம்பவான்கள்.

பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த நடிகை! வைல்ட் கார்டு என்ட்ரியா?

Kamal and Rajini

ஒரு காலகட்டத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இருவரும் இரு வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் சிறந்த நண்பர்களாகவே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகின்றனர். குறிப்பாக கடந்த 2010ம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு "கமல் 50" என்ற விழா கொண்டாடப்பட்டது. அதில் கமலை பெரிய அளவில் புகழ்ந்து பேசிய ரஜினியை பார்த்து கமலஹாசன் சொன்ன ஒரு வார்த்தை இன்றளவும் உண்மையாகத்தான் இருக்கிறது.

அதாவது இதற்கு முன் உள்ள ஜெனரேஷனில் என்னை போல ரஜினிகாந்த் போல நண்பர்கள் இருந்ததே கிடையாது என்று அவர் கூறினார். ஆனால் அவர்களுடைய காலத்திற்குப் பிறகும் இன்று வரை எந்த ஒரு பெரிய டாப் நடிகர்களும் பெரிய அளவில் நட்பு கொண்டாடியதாக தெரியவில்லை. இப்படி பல புகழுக்கு சொந்தக்காரர்களான இந்த இரண்டு ஜாம்பவான்கள் கூடவும் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிய ஒரு டாப் தமிழ் நடிகை இருந்து வருகின்றார்.

Tap to resize

Actress Nadhiya

இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "பூவே பூச்சூடவா". தமிழில் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் நதியா. ஆனால் அதற்கு முன்னதாகவே மலையாள திரைப்படங்களில் அவர் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980களின் இறுதியில் தமிழ் திரை உலகில் டாப் நடிகையாக வலம் வந்த இவர் மோகன், சத்யராஜ், பிரபு மற்றும் விஜயகாந்த் என்று பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரோடும் இவர் திரைப்படங்களில் நடித்ததில்லை. குறிப்பாக நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தும் அதை இவர் பலமுறை தட்டிக் கழித்ததாகவும் சில தகவல்கள் கூறப்படுகிறது. இன்றளவும் இவர் கமலோடு எந்த படத்திலும் நடித்ததேயில்லை.

nadhiya Rajathi Raja

இந்த சூழலில் தான் கடந்த 1989ம் ஆண்டு இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் "ராஜாதி ராஜா" என்கின்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிக்க நதியாவிடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் கருப்பாக இருப்பதால் அவரோடு நடிக்க மாட்டேன் என்று முதலில் நதியா கூறியதாக இன்றளவும் சில தகவல்கள் வலம் வந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இறுதியில் அவரோடு நெருக்கமான காட்சிகள் இருக்கக் கூடாது, டூயட் பாடல்களில் ரொமான்டிக் காட்சிகள் இருக்கக் கூடாது என்று உத்தரவாதம் வாங்கிய பிறகு, ரஜினிகாந்துடன் அவர் நடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது நதியாவிற்கு மட்டுமே வெளிச்சம்.

ஆயுத பூஜை ஸ்பெஷல்; புத்தகங்களுக்கு நடுவே.. பட்டுடவையில் விக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா!

Latest Videos

click me!