காசு கொடுத்து வாங்குறதுக்கு சமம்; கோவத்தின் உச்சத்தில் தேசிய விருதை மறுத்த வாலி!

Published : Oct 11, 2024, 12:46 PM IST

மத்திய அரசு வழங்கிய தேசிய விருதை, கவிஞர் வாலி புறக்கணித்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? அதுவும் உச்சகட்ட கோவத்தில். அவரின் கோவத்திற்கு காரணம் என்ன? ஏன் மறுத்தார் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
15
காசு கொடுத்து வாங்குறதுக்கு சமம்; கோவத்தின் உச்சத்தில் தேசிய விருதை மறுத்த வாலி!
Lyricist Vaali

எப்படிப்பட்ட சூழ்நிலை கொடுத்தாலும், அதை நேர்த்தியாக கையாண்டு பல பாடல்களை எழுதி பிரபலமானவர் கவிஞர் வாலி. இவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருது, உட்பட தமிழக அரசின் விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. ஆனால் இவரிடம் மத்திய அரசு தரப்பிடம் தேசிய விருதை வழங்க உள்ளதாக அறிவித்தபோது அதை மறுத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

25
Bharatha Vilas

1973 ஆம் ஆண்டு, இயக்குனர் ஏசி திரிலோகசந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பாரத விலாஸ்'. சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், கே ஆர் விஜயா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மேஜர் சுந்தர்ராஜன், தேவிகா, விகே ராமசாமி, ராஜ சுலோக்சனா, எம் ஆர் ஆர் வாசு, மனோரம்மா, சிவக்குமார், ஜெயசுதா, ஜெயசித்ரா, சசிகுமார், எஸ்வி ராமதாஸ், ஜே பி சந்திரபாபு, நடிகை ஸ்ரீதேவி, செந்தாமரை உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த நடிகை! வைல்ட் கார்டு என்ட்ரியா?

35
Bharatha Vilas Super hit Song

இப்படம் சாதி, மொழி, இனம், ஆகியவற்றிக்கு அப்பாற்பட்டது இந்தியன் என்கிற ஒற்றுமை உணர்வு என்பதை விளக்கும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு வீட்டை மையமாக வைத்து இந்திய ஒற்றுமையை காட்டி இருந்தார் இயக்குனர். இந்த வீட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின், பஞ்சாபி, என பல மதங்களை, பல மாநிலத்தவர் இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை பறைசாற்றிய பாடல், 'இந்திய நாடு என் வீடு' என்கிற பாடல்.

45
Vaali Refused National Award

காலம் கடந்து தற்போது வரை ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும், சுதந்திர தின விழாவிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச ஒற்றுமைக்காக இந்த பாடல் ஒளிபரப்பப்படுகிறது.  எம் எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த பாடலுக்கு வாலி வரிகள் எழுத இந்த பாடலை, எம்.வி.எஸ், உற்பட... டி.எம். சௌந்தரராஜன், கே வீரமணி, சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, மலேசியா வாசுதேவன், ஆகிய 6 பேர் பாடி இருந்தனர்.  அதேபோல் இந்த பாடலுக்கு, ஏராளமான இந்திய இசை கருவிகளை எம்.எஸ்.வி பயன்படுத்தி இருந்தார்.

வசூல் வேட்டையாடினாரா ரஜினிகாந்த்? வேட்டையன் முதல் நாள் கலெக்ஷன் இதோ!
 

55
Vaali and MSV Combination

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த பாடலை எழுதியதற்காக, தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை வாலி வாங்க முடியாது என மறுத்துள்ளார். இதற்கு காரணம் தேசிய விருதை கொடுக்க முடிவு செய்த மத்திய அரசு, கவிஞர் வாலிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி... இந்த பாடலுக்காக உங்களுக்கு தேசிய விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே உங்களுடைய விவரங்களை எங்களுக்கு அனுப்புமாறு கடிதம் எழுதி இருந்தது.

இந்த கடிதம் தான் வாலியின் கோபத்தை சீண்டிப் பார்த்தது. என்னுடைய விபரங்கள் கூட தெரியாமல் எப்படி எனக்கு தேசிய விருது கொடுக்க அவர்களால் முடிந்தது.  இது எனக்கு அவமரியாதை போன்றது எனக்கு கூறி மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்தை கிழித்துப் தூக்கி போட்டது மட்டுமின்றி என்னுடைய விபரங்களை நானே அனுப்பி, அந்த விருதை வாங்கினால் அது காசு கொடுத்து விருது வாங்குவதற்கு சமம். மக்கள் என் பாடலை ரசித்து கேட்பது தான் எனக்கு தேசிய விருதை விட பெரியது என கூறி தேசிய விருதை மறுத்தாராம். இந்த தகவலை வாலி தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories