யுவன் 8 வயசுல போட்ட டியூன், அப்படியே காப்பி அடிச்சு யூஸ் பண்ணிக்கிட்ட இளையராஜா - எந்த பாட்டுக்கு தெரியுமா?

First Published | Oct 11, 2024, 12:30 PM IST

Yuvan Shankar Raja First Tune and Ilaiyaraaja Songs: இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா வித்தியாசமானவர்கள். யுவன் 8 வயதில் போட்ட டியூனை இளையராஜா தனது 'ஆனந்த்' படத்தில் பயன்படுத்தினார் என்பது ஆச்சரியமான உண்மை.

Ilaiyaraaja, Poovukku Poovale Song Lyrics

தமிழ் சினிமாவில் அப்பா மகன் நடிகர்களாக இருந்து ஆண்டு வரும் காலம் நடைபெற்று வருகிறது. அதில் சிவாஜி கணேசன், பிரபு வைரிசையில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, டி ராஜேந்தர் தற்போது சிம்பு, நடிகர் சிவக்குமாரின் மகன்கள், சூர்யா மற்றும் கார்த்தி, தியாகராஜன் மற்றும் பிரசாந்த், விஜயகுமார் மற்றும் அருண் விஜய், சத்யராஜ் மற்றும் சிபிராஜ், பாக்யராஜ் மற்றும் சாந்தனு என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவர்கள் நடிகர்களாக சினிமாவை கலக்கிய நிலையில் இவர்களை ஆட்டம் போட வைத்த அப்பா மகன்கள் வரிசையில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா, தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா, கங்கை அமரன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரை சொல்லலாம்.

Ilaiyaraaja and Yuvan Shankar Raja, Anand Movie, Poovukku Poovale Song

ஒரு நடிகர்களாக யாரும் அப்பாவை போன்று நடிப்பதில்லை. ஆனால், இசையில், அப்பா போட்ட டியூனை காப்பி அடிப்பதும் இல்லை. ஆனால், ஒரு அப்பாவாக இருந்து கொண்டு 8 வயதில் தனது மகன் போட்ட டியூனை காப்பி அடித்து தன்னுடைய படத்திற்கு யூஸ் பண்ணிய சம்பவம் பற்றி தெரியுமா? அதைப் பற்றி தான் இந்தப் படத்தில் நாம் பார்க்கப் போகிறோம்.

இசையமைப்பாளராக ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் இளையராஜவின் மகன் யுவன் சங்கர் ராஜா. தான் சிறுவனாக இருந்த போது 8 வயதில் போட்ட டியூனை அவரது அப்பாவும் இசையமைப்பாளருமான இளையராஜா தனது படத்திற்கு யூஸ் பண்ணியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறா? 1976 ஆம் ஆண்டு முதல் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா ஹிட் கொடுக்காத பாடல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எத்தனையோ பாடல்களை ஹிட் கொடுத்துள்ளார்.

Tap to resize

Yuvan Shankar Raja and Ilaiyaraaja

இளையராஜா படம் என்றாலே அந்தப் படம் போனியாயிடும். அப்படியிருக்கும் போது அவருக்கே டஃப் கொடுக்கும் பல ஹிட் கொடுத்தவர் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா. இவரது முதல் படம் 1997ல் வெளியான அரவிந்தன் படம் தான். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தார். கடைசியாக வெளியான விஜய்யின் கோட் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள விஷில் போடு, மட்ட, ஸ்பார்க், சின்ன சின்ன கண்கள் ஆகிய பாடல்கள் ஹிட் அடித்தன.

Yuvan Shankar Raja First Tune, Anand Movie

தனது 19 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், 8 வயதில் ஒரு டியூன் போட்டுள்ளார். அந்த டியூனைத் தான் இளையராஜா தனது படத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் படம் தான் பிரபு நடிப்பில் 1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஆனந்த். இந்த படத்தில் பூவுக்கு பூவாலே மஞ்சம் உண்டு என்ற பாடலுக்கு யுவன் தான் டியூன் போட்டிருப்பார். அதைப் பற்றி ராஜாவே ஒரு மேடையில் கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!