பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த நடிகை! வைல்ட் கார்டு என்ட்ரியா?

Published : Oct 11, 2024, 10:30 AM ISTUpdated : Oct 11, 2024, 10:34 AM IST

பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நடிகை ஒருவர் நுழைந்துள்ள நிலையில்... பிக்பாஸ் ரசிகர்கள் இவர் வைல்ட் கார்டு என்ட்ரியா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  

PREV
15
பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த நடிகை! வைல்ட் கார்டு என்ட்ரியா?
Bigg boss Tamil season 8 contestant

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில்... பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே பிக்பாஸ் வீட்டுக்குள், ரவீந்தர் சந்திரசேகர், சாஞ்சனா, தீபக், தர்ஷா குப்தா, அர்னவ், அக்ஷிதா, விஜே விஷால், தர்ஷிகா, ஜாக்குலின், ரஞ்சித், முத்துக்குமரன், ஜெஃபிரி, உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.

25
Bigg Boss First Elimination

ஒரு தொகுப்பாளராக முதல் நாளே விஜய் சேதுபதி கலக்கிய நிலையில்... முதல் வாரம் போட்டியாளர்களை எப்படி விஜய் சேதுபதி வெளுத்து வாங்க போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் ஆண்கள் அணி - பெண்கள் அணி என பிரித்து போட்டு, இரு தரப்பையும் இந்த முறை மோத வைத்துள்ளார் பிக்பாஸ். ஆண்கள் அணிக்கு சில சலுகைகளையும், பெண்கள் அணிக்கு சில சலுகைகளையும் கொடுத்துள்ள பிக்பாஸ்... வீட்டு பணிகளை செய்வதற்காக வைத்த டாஸ்கில் பெண்கள் அணி... ஆண்களிடம் தோற்றதால், இந்த வாரம் அணைத்து வேலைகளையும் பெண்கள் அணி செய்யவேண்டியுள்ளது.

சுச்சுவேஷன் தெரியாமல்.. சோக பாட்டை சிரித்து கொண்டே பாடிய SPB! எந்த பாடல் தெரியுமா?

35
Bigg Boss Tamil season 8 Controversy

ஆண்கள் அணியை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், பெண்கள் அணி அவர்களுக்குளேயே சண்டை போட்டு கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் அணியினர் ஃபேக் சண்டை போட்டு பெண்கள் அணியை ஏமாற்றியது வேற லெவல் ஸ்டேட்டர்ஜியாக பார்க்கப்பட்டது. சில போட்டியாளர்கள் இதை விளையாட்டாக எடுத்து கொண்டாலும், ஜாக்குலின் சீரியசாக எடுத்து கத்தி கூப்பாடு போட்டது, கன்டென்ட் கொடுக்க வேண்டும் என செய்ததாகவே பார்க்கப்பட்டது.

45
Sachana Namidass Bigg Boss Entry

இன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிதாக எந்த பிரச்சனையும் துவங்க வில்லை என்றாலும் சுவாரஸ்யமாகவே செல்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 24 மணிநேரத்திலேயே மகாராஜா பட நடிகை சாச்சனா வெளியேறிய நிலையில்... இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 போட்டியாளர்களின் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பு படி ரவீந்தர் அல்லது ரஞ்சித் வெளியேறலாம் என கூறப்படுகிறது.

வசூல் வேட்டையாடினாரா ரஜினிகாந்த்? வேட்டையன் முதல் நாள் கலெக்ஷன் இதோ!

55
Bigg boss Tamil season 8 Promo

இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரோமோவில்... 24 மணிநேரத்தில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடிகை சாச்சனா அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார். ரகசிய கதவு மூலம் உள்ளே வரும் சாச்சனா, யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்று அமர்ந்திருக்கும் நிலையில்... விஜே விஷால், சாச்சனாவை பார்த்த சந்தோஷத்தில் கத்துகிறார். பின்னர் சாச்சனா மீண்டும் வீட்டுக்குள் வந்ததை அணைத்து போட்டியாளர்களும் மகிழ்ச்சியாக எடுத்து கொண்ட நிலையில், சாச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் மிகவும் குறைவாக கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்கள் யார் என்பதை குறிப்பிட்டு கூறியுள்ளார். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories