தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யாரு தெரியுமா?

First Published | Oct 11, 2024, 12:02 PM IST

தமிழ் சினிமா மட்டுமன்றி, தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நடிகைகள் பான் இந்தியா படங்களில் நடித்து வருகின்றனர். நடிகர்களை போலவே நடிகைகளும், அவர்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு சம்பளம் வாங்கி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார், அவர்கள் எவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

Highest Paid Tamil Actress

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு ₹3 முதல் ₹4 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்தார். நடிகர் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார்.

Pooja Hegde

நடிகை பூஜா ஹெக்டே தெற்கு மற்றும் பாலிவுட் ஆகிய இரண்டிலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். தற்போது ஒரு படத்திற்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் பூஜா ஹெக்டே. அனைவராலும் எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜயின் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

Tap to resize

Anushka Shetty

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. ஏறக்குறைய இருபது வருடங்கள் சினிமாவில் நடித்து வரும் அனுஷ்கா ஒரு படத்திற்கு ₹4 முதல் ₹7 கோடி வரை சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா.

Trisha

அனுஷ்காவை போலவே 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. விஜயுடன் லியோ, தி கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு மஞ்சள் சேலையுடன் குத்தாட்டம் போட்டும் அசத்தினார் த்ரிஷா. நடிகை த்ரிஷா ஒரு படத்திற்கு ₹4 முதல் ₹6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Nayanthara

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் நடிகை நயன்தாராதான். அனுஷ்கா, த்ரிஷாவை போலவே நீண்ட காலமாக நடித்து வரும் நடிகை நயன்தாரா, ஒவ்வொரு படத்திற்கும் ₹13 முதல் ₹15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

ரெகார்ட் பிரேக்கிங்; 'கோட்' படத்தின் லைப் டைம் வசூல் அதிகார பூர்வமாக அறிவிப்பு!

Latest Videos

click me!