இந்த சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் விரைவில் அரசியலுக்குள் வரப் போகிறார் என்கின்ற பேச்சுக்கள் அடிபட்டது. அது மட்டுமில்லாமல் அண்மையில் வெளியான அவருடைய பல திரைப்படங்களிலும் அரசியல் வாசம் அதிக அளவில் வீசி வந்தது என்றால் அது மிகையல்ல. இந்த சூழலில் இந்த 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். அது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த அதே நேரம், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தளபதி விஜய் வெளியிட்ட அறிவிப்பு திரையுலகில் அவரை பெரிய அளவில் ரசிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இடியாக அமைந்தது. ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் அவர் களமிறங்க உள்ளார்.