பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் மக்கள் செல்வன் மகன் சூர்யா சேதுபதி - இதென்ன புது ட்விஸ்டா இருக்கு!

Published : Oct 12, 2024, 07:49 AM ISTUpdated : Oct 12, 2024, 11:45 AM IST

Vijay Sethupathi son Surya enter Bigg Boss House : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் மக்கள் செல்வன் மகன் சூர்யா சேதுபதி - இதென்ன புது ட்விஸ்டா இருக்கு!
Vijay Sethupathi son Surya

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இதுவரை 50 படங்களில் நடித்திருக்கிறார். இவரின் 50வது படமான மகாராஜா பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் டிரெயின், வெற்றிமாறன் இயக்கும் விடுதலை இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

25
surya sethupathi

இந்த பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் இருந்து அவர் விலகியதால் அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். இந்நிகழ்ச்சியை கமல் அளவுக்கு தொகுத்து வழங்குவாரா என சந்தேகம் இருந்த நிலையில், அதையெல்லாம் முதல் எபிசோடிலேயே தவிடுபொடியாக்கி மாஸ் காட்டிவிட்டார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் யாருக்கு எவ்வளவு சம்பளம்!

35
Phoenix Movie

பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது புது ட்விஸ்டாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. ஆனால் அவர் போட்டியாளராக செல்லப்போவதில்லை, ஒரு கெஸ்ட் ஆக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். 

45
Phoenix Movie Release Date

விஜய் சேதுபதி மகன் சூர்யா, பீனிக்ஸ் என்கிற படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற நவம்பர் 14-ந் தேதி பீனிக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

55
Bigg Boss Vijay Sethupathi

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளித்து வருவதால், அந்நிகழ்ச்சிக்கு சென்றால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஈஸியாக அது ரீச் ஆகிவிடும். அதனால் பல நடிகர், நடிகைகள் தங்கள் படங்களை புரமோட் செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதுண்டு. அந்த வரிசையில் விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் பீனிக்ஸ் படத்தை புரமோட் செய்ய விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... விளையாட்டு வினை ஆனது! பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை - முட்டி மோதும் போட்டியாளர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories