தமிழ் திரை உலகில் இயக்குனராகவும், நடிகராகவும், பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும், இப்போது சின்னத்திரை நடிகராகவும் பயணித்து வருபவர் தான் சுந்தர்ராஜன். இன்றும் இவருடைய பல திரைப்பட காட்சிகள், மீம்ஸுகளாக பயன்படுத்தப்படுவதை நம்மால் பார்க்க முடியும். இந்த கால இளைஞர்களுக்கு இவரை ஒரு சின்னத்திரை நடிகராக மட்டுமே பெரிய அளவில் தெரியும். உண்மையில் தமிழ் சினிமாவை தனது பிடியில் வைத்திருந்த மிகச்சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
கடந்த 1981ம் ஆண்டு முதல் நடிகராக தமிழ் திரை உலகில் பயணித்து வரும் சுந்தர்ராஜன், 1982ம் ஆண்டு பிரபல நடிகர் மைக் மோகன் நடிப்பில் வெளியான "பயணங்கள் முடிவதில்லை" என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மெகா வெற்றி படங்களாக மாறியது. அதற்கு ஒரே காரணம் இவருடைய திரை கதையும், இயக்கமும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல.
34
Thalapathy Vijay
இசைஞானி இளையராஜாவோடு இணைந்து ஆர். சுந்தர்ராஜன் பல திரைப்படங்களில் பயணித்திருக்கிறார். குறிப்பாக "அம்மன் கோவில் கிழக்காலே", "மெல்லத் திறந்தது கனவுகள்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ராஜாதி ராஜா" உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் இன்றும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களாக மாறிய திரைப்படங்கள் என்றே கூறலாம். இந்நிலையில் சுந்தர்ராஜனுக்கும், இளையராஜாவுக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்த தகவலை தற்பொழுது பார்க்கலாம்.
44
Vaithegi Kathirunthal
ஒரு முறை இளையராஜா தன்னிடம் சில டியூன்கள் இருப்பதாகவும், அதற்கு ஒரு கதையை அமைப்பவர்களுக்கு அதை கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஓபன் சேலஞ்ச் ஒன்றை அறிவித்தார். இந்த சவாலை ஏற்றுக்கொள்ள முன்னணி இயக்குனர்களே தயங்கிய நிலையில், அதை அசாதாரணமாக ஏற்றுக்கொண்டு, இளையராஜாவின் 6 மெட்டுக்களுக்கு ஒரு கதையை எழுதி அதையும் வெற்றி திரைப்படமாக மாற்றினார் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்.
அந்த திரைப்படம் தான் கடந்த 1986ம் ஆண்டு வெளியான கேப்டன் விஜயகாந்தின் "வைதேகி காத்திருந்தாள்" என்ற படம். கேப்டன் விஜயகாந்த், மைக் மோகன் என்று இந்த இரு நடிகர்களுக்கு தான் அதிக அளவில் படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்ராஜன். தளபதி விஜயின் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தை இயக்கியதும் இவர் தான்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.