பிரபல நடிகர் பரத், சிக்ஸ் பேக் உடலோடு மிரட்டிய ஒரு திரைப்படம் தான் ஐந்து ஐந்து ஐந்து. கடந்த 2013ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்காக பல பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டு, பல சவாலான விஷயங்களை நடிகர் பரத் செய்திருந்தாலும், இந்த திரைப்படம் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.