கமல் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? பரபரப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 8 ப்ரோமோ ஷூட்டிங்!

First Published | Aug 30, 2024, 4:34 PM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 8 ப்ரோமோ ஷூட்டிங் விஜய் சேதுபதியை வைத்து பரபரப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Biggboss Show

பல எதிர்ப்புகளுக்கு இடையே விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில்,  பிக்பாஸ் நிகழ்ச்சி குழந்தைகள் பார்க்க உகந்த நிகழ்ச்சி இல்லை என, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது மட்டும் இன்றி, இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கூறினர். அவை அனைத்தையும் கமலஹாசன் மிகவும் சாமர்த்தியமாக சமாளித்து, பிக்பாஸ் முதல் சீசனை பலரது ஃபேவரட் நிகழ்ச்சியாக மாற்றினார்.
 

Biggboss season 7 Controversy

இதைத்தொடர்ந்து வெற்றிகரமாக கடந்த 7 சீசனை,  கமலஹாசன் தொகுத்து வழங்கியதை தொடர்ந்து.. கடந்த சீசனில் கமலஹாசன் மாயா கேங்குக்கு சப்போர்ட்டாகவும் அவர்கள் சொல்வதை குருட்டுத்தனமாக நம்பி பிரதீப் ஆண்டனியை ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றியது பலர் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை; நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார்!
 

Tap to resize

Biggboss Season 7 Title Winner Archana

பின்னர் இது குறித்து கமல்ஹாசன் பல விளக்கங்களை கொடுத்த போதிலும் அது ரசிகர்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. பிரதீப் ஆண்டனி வெளியேறியதால் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் தவிர்த்த சம்பவங்களும் நடந்தன. ஒருவழியாக இந்த சர்ச்சை ஓய்ந்து, பிரதீப் ஆண்டனிக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து குரல் கொடுத்த அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
 

Kamalhaasan Quit Biggboss show

மேலும் உலக நாயகன் கமலஹாசன் கடந்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீர் என விலகுவதாக அறிவித்தார். ஏ ஐ தொழில்நுட்பம் குறித்து படிப்பதற்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. அதே நேரம் அரசியல் நோக்கங்களுக்காகவும் கமலஹாசன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

முதல் குழந்தையை வரவேற்க 100 கோடியில் புதிய வீடு வாங்கிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்! எங்கு தெரியுமா?
 

Vijay Seathupathi is New Anchor in Biggboss

கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதால், அவருடைய இடத்தை பிடிக்கப் போவது யார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தற்போது பிக்பாஸ் புரோமோ ஷூட்டிக் விஜய் சேதுபதியை வைத்து பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Biggboss Season 8 Promo

மேலும் விஜய் சேதுபதி பாரதி பூங்காவில், பவுன்சர்களுடன்  நடந்து வருவது போல் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய பெயர்களும் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், இந்த முறை போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்வார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாடர்ன் சரோஜா தேவியாக மாறி... சைடில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

Latest Videos

click me!