Cinemas Greatest Villain:டிரெண்டை மாற்றும் தமிழ் சினிமா – எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி வழியை பின்பற்றும் ஹீரோக்கள்

Published : Aug 30, 2024, 04:07 PM IST

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தமிழ் நடிகர்களே வில்லன்களாக இருந்தனர். பின்னர், மற்ற மொழி நடிகர்கள் வில்லன்களாக அறிமுகமானார்கள். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களே வில்லன் வேடங்களில் கலக்கி வருகின்றனர்.

PREV
17
Cinemas Greatest Villain:டிரெண்டை மாற்றும் தமிழ் சினிமா – எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி வழியை பின்பற்றும் ஹீரோக்கள்
MGR Tamil Movies

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் வில்லன்கள் எப்போதும் தமிழ் நடிகர்களாகவே இருந்தனர். அதன் பிறகான காலகட்டத்தில் மற்ற மொழி நடிகர்கள் வில்லன்களாக களமிறக்கப்பட்டனர். இதையடுத்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களே வில்லன்களாக அவரதாரம் எடுத்து கலக்கி வருகின்றனர்.

27
MGR Tamil Movies

கடந்த 1936ல் தொடங்கி 1991 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான படங்களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்துள்ளார். இதே போன்று நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

37
Rajinikanth and Kamal Haasan

இவர்களது படங்களில் எல்லாம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எம்.ஆர்.ராதா, அசோகன், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், விகே ராமசாமி ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதன் பிறகு ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களிலும் தமிழ் சினிமா நடிகர்கள் தான் வில்லன்களாக இருந்தனர்.

47
MGR and Sivaji Ganesan

ஆனால், 1990ஸ் மற்றும் 20ஸ்க்கு பிறகான காலகட்டங்களில் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என்று மற்ற மொழி நடிகர்கள் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தனர். ரஜினிகாந்தே ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோவாக உச்சம் தொட்டவர் தான். 16 வயதினிலே, காயத்ரி, ஆடு புலி ஆட்டம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு, நானா படேகர், விநாயகன், சுனில் ஷெட்டி, வின்ஸ்டன் சாவோ என்று மற்ற மொழி நடிகர்கள் வில்லன்களாக நடித்தனர்.

57
MGR Movies

ஆனால், தற்போது உள்ள காலகங்களில் மீண்டும் தமிழ் சினிமா நடிகர்களே வில்லன்களாக நடித்து வருகின்றனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ரஜினிகாந்த், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவ்வளவு ஏன், தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ளார்.

67
Raghuvaran

சமீபத்தில் திரைக்கு வந்த ராயன் படத்தில் தனுஷிற்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார். இப்படி தமிழ் நடிகர்கள் வில்லன்களாக நடித்திருந்த காலம் மாறி மற்ற மொழி நடிகர்கள் வில்லன்களாக நடித்த காலம் வந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் தமிழ் நடிகர்கள் வில்லன்களாக நடித்து வரும் காலம் வந்துவிட்டது.

77
S J Suryah

தமிழ் நடிகர்கள் பழம் பெரும் நடிகர்கள் எப்படி தமிழ் நடிகர்களை வைத்து மாஸ் காட்டினார்களோ அதே போன்றுதான் தற்போதும் தமிழ் வில்லன் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories