முதல் குழந்தையை வரவேற்க 100 கோடியில் புதிய வீடு வாங்கிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்! எங்கு தெரியுமா?

First Published | Aug 30, 2024, 2:21 PM IST

நடிகை தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடி கூடிய விரைவில் தங்களுடைய முதல் குழந்தையை வரவேற்க உள்ள நிலையில், குழந்தைக்காக சுமார் 100 கோடி மதிப்புள்ள புதிய வீட்டை வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
 

Ranveer Singh and Deepika Padukone Marriage

பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா - ரன்வீர் சிங் இருவரும் பாஜிராவ் மஸ்தானி, ராம் லீலா, பத்மாவத், போன்ற படங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து நடித்தபோது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கினர். பின்னர் இவர்கள் இருவரும் இத்தாலியில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
 

Deepika Padukone 1000 Cr Movies

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து இருவருமே நடிப்பில் கவனம் செலுத்தி வந்தனர். திருமணத்திற்கு பின்னர் தீபிகா படுகோன், ஷாருக்கானுடன் நடித்த பதான், ஜவான், ஆகிய இரண்டு படங்களுமே 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. அதே போல் பிரபாஸுடன் நடித்த கல்கி 2898 AD, ரித்திக் ரோஷன் ஜோடியாக நடித்த பைட்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவரின் கைவசம் கல்கி 2-ஆம் பாகம் மட்டுமே உள்ளது.

மாடர்ன் சரோஜா தேவியாக மாறி... சைடில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!
 

Tap to resize

Deepika Padukone Pregnancy:

கடந்த பிப்ரவரி மாதம், கர்ப்பமாக இருக்கும் தகவலை தீபிகா படுகோன் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததை தொடர்ந்து, தற்போது தன்னுடைய படப்பிடிப்பு பணிகளில் இருந்து மொத்தமாக விலகி, முழு ஓய்வில் இருக்கிறார் தீபிகா படுகோன். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டுமே தலை காட்டி வருகிறார்.
 

Ranveer Singh and Deepika Padukone Bought new house:

இன்னும் ஒரு சில மாதங்களில் அழகிய குழந்தைக்கு தாயாக உள்ள தீபிகா படுகோன், தன்னுடைய குழந்தையை வரவேற்க 100 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்டில் இந்த வீடு உள்ளதாகவும், நடிகர் ஷாருக்கானின் மன்னத் வீட்டுக்கு மிக அருகாமையில் இந்த வீடு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தளபதியா இப்படி? P.A. மூலம் சொன்ன வார்த்தை; மனசு நொந்து பார்க்க கூடாதுனு முடிவெடுத்த ராதாரவி!
 

Ranveer Singh and Deepika Padukone near Sharukkhan house

இவர்கள் வாங்கியுள்ள இந்த புதிய வீடு குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கடற்கரை அழகை ரசிக்கும் படி அமைந்துள்ள இந்த வீடு, 11,266 சதுர அடி உட்புற இடத்தை கொண்டுள்ளதாம்... இதில் இவர்களது வீடு 1,300 ஆடியில் உள்ளதாகவும்... இந்த கட்டிடத்தில் 16 முதல் 19 வது மாடிவாரி தீபிகா - ரன்வீர் வீடு அமைந்துள்ளதாம். 
 

Ranveer Singh and Deepika Padukone house

இந்த நான்கு மாடியில் இவர்களின் ஜிம், நீச்சல் குளம், மாடி தோட்டம், விசிட்டர் ரூம், உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இவர்கள் இருவரும் ஏற்கனவே 2021ல் அலிபாக்கில் ரூபாய் 22 கோடியில் ஒரு பங்களாவை வாங்கியது குறிப்பிடத்தக்கது. தங்களின் குழந்தைக்காக இவர்கள் வாங்கியுள்ள இந்த வீட்டில் குழந்தை பிறந்த பின்னர் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோட்டலில் ஹீரோயினுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை! நடுவில் புகுந்து அடி வாங்கிய ஷகீலா - ஷாக் தகவல்!
 

Latest Videos

click me!