இளையராஜாவுக்கு இல்ல... ஏ.ஆர்.ரகுமான் வேறு இசையமைப்பாளர் இசையில் பாடிய ஒரே பாட்டு! யாருக்கு பாடினார்?

Published : Aug 30, 2024, 01:40 PM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது இசையமைப்பில் ஏராளமான பாடல்கள் பாடி இருந்தாலும், பிற இசையமைப்பாளர் இசையில் ஒரே ஒரு பாடலை தான் பாடி இருக்கிறார்.

PREV
14
இளையராஜாவுக்கு இல்ல... ஏ.ஆர்.ரகுமான் வேறு இசையமைப்பாளர் இசையில் பாடிய ஒரே பாட்டு! யாருக்கு பாடினார்?
AR Rahman

இளையராஜாவிடம் கீபோர்ட் வாசித்து வந்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய புதுவிதமான இசையாலும், பாடல்களாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ஏ.ஆர்.ரகுமான். இதையடுத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஏ.ஆர்.ரகுமானின் இசை ராஜ்ஜியம் தொடர்ந்து வருகிறது. இன்று கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

24
AR Rahman songs

இசையமைப்பாளர்கள் பாடல்களைப் பாடுவது நாம் அறிந்ததே. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி அனிருத் வரை பல இசையமைப்பாளர்கள் பாடல் பாடுவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். இளையராஜா தனது இசை தாண்டி யுவன் சங்கர் ராஜா இசையிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதேபோல் யுவன், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களும் தங்கள் இசையில் பாடுவதை போல் பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... நாங்க முதன்முதலில் காப்பி அடிச்ச பாட்டு இதுதான்... சீக்ரெட்டை உடைத்த யுவன் - வெங்கட் பிரபு

34
AR Rahman Sing only one song for Other Music Director

ஆனால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மட்டும் அதில் விதிவிலக்காக இருந்து வருகிறார். அவர் இசையில் யுவன் சங்கர் ராஜா, அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் பாடி இருந்தாலும், அவர் மட்டும் தமிழில் பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடியதே இல்லை. ஆனால் அவர் பாடும் பாடலுக்கு தனி மவுசு உண்டு. தனது இசையில் மட்டுமே ரகுமான் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். அவர் ஒரு பாடல் பாட ரூ.3 கோடி வரை சம்பளமும் வாங்குகிறார்.

44
AR Rahman Sing song in jugni movie

யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, அனிருத், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடாத ஏ.ஆர்.ரகுமான் ஒரே ஒரு பாடல் மட்டும் பிற இசையமைப்பாளர் இசையில் பாடி இருக்கிறார். அது யார் தெரியுமா... கிளிண்டன் சிரெஜோ என்பவர் இசையில் தான் ஏ.ஆர்.ரகுமான் பாடி இருக்கிறார். கிளிண்டன் சிரெஜோ ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர் ஆவார். அவர் இசையமைத்த ஜுக்னி படத்துக்காக லகோன் சலாம் என்கிற ஒரு பாடலை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் பாடி இருந்தார். இதுதான் அவர் வேறு இசையமைப்பாளர் இசையில் பாடிய ஒரே ஒரு பாடலாகும்.

இதையும் படியுங்கள்... மாடர்ன் சரோஜா தேவியாக மாறி... சைடில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

Read more Photos on
click me!

Recommended Stories