மாடர்ன் சரோஜா தேவியாக மாறி... சைடில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

First Published | Aug 30, 2024, 1:34 PM IST

நடிகை ரம்யா பாண்டியன் மஞ்சள் நிற காட்டன் புடவையில்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு, மாடர்ன் சரோஜா தேவி கெட்டப்புக்கு மாறி வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Ramya Pandian

'இடும்பன்காரி' படத்திற்காக காத்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இவர் மஞ்சள் சேலையில் மயக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

Ramya Pandian

வெயிட்டான சினிமா பின்புலம் இருந்தும், எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல்... சினிமாவில் தன்னடக்கத்தோடு அறிமுகமாகும் நடிகர்கள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட நடிகை தான் ரம்யா பாண்டியன்.

தளபதியா இப்படி? P.A. மூலம் சொன்ன வார்த்தை; மனசு நொந்து பார்க்க கூடாதுனு முடிவெடுத்த ராதாரவி!

Tap to resize

Ramya Pandian

தயாரிப்பாளரும், நடிகருமான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் ரம்யா. ஆனால் அவரின் பெயரை சொல்லி வாய்ப்பு தேடாமல், படிக்கும் போதே... பல குறும்படங்களில் நடித்து, பின்னர் தன்னுடைய திறமையால் டம்மி டப்பாசு படத்தில் ஹீரோயின் வாய்ப்பை கைப்பற்றினார்.

Ramya Pandian

முதல் படம் தோல்வி அடைந்தாலும், இதை தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், ரம்யா பாண்டியன் நடித்த 'ஜோக்கர்' தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை பெற்று தந்தது.

ஹோட்டலில் ஹீரோயினுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை! நடுவில் புகுந்து அடி வாங்கிய ஷகீலா - ஷாக் தகவல்!

Ramya Pandian

இதை தொடர்ந்து மிகவும் இளம் வதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிந்து நடித்த ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து அதே போன்ற வாய்ப்புகள் வந்ததால்... மற்ற வாய்ப்புகளை ஏற்க மறுத்தார்.

Ramya Pandian

எப்படியும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருந்த ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில், தன்னுடைய இடையழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ஒரே நாளில் கோலிவுட்டையே திருப்பி பார்க்க வைத்தது.

சிறகடிக்க ஆசையை அடித்து பறக்கவிட்ட சன் டிவி தொடர்கள்! இந்த வார டாப் 10 TRP லிஸ்ட் இதோ!

Ramya Pandian

நிலையான இடத்தை பிடிக்க, தரமான கதையம்சம் கொண்ட படங்களில் தான் நடிக்க வேண்டும் என ரம்யா பாண்டியன் தீர்மானமாக இருந்ததால் பல வாய்ப்புகளை இழந்தார். 

Ramya Pandian

யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில்... புகழுடன் சேர்ந்து ரம்யா பாண்டியன் செய்த அலப்பறைகள் அதிக அளவிலான ரசிகர்களை கவர்ந்தது.

பாலியல் தொல்லையை எதிர்கொள்ள நடிகைகள் இதை செய்யலாம்! ஊர்வசி கொடுத்த சூப்பர் ஐடியா?

Ramya Pandian

இதை தொடர்ந்து, அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கிய ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஃபைனல் வரை  முன்னேறினார். ஆனால் அந்த சீசனில் ஆரி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், தற்போது வரை ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடத்தை பிடிக்க கூடிய வாய்ப்புக்காக கார்த்திருக்கிறார்.

Ramya Pandian

அவ்வப்போது குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும், தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிடும் ரம்யா பாண்டியன், தற்போது மஞ்சள் காட்டு மைனாவாக மாறியுள்ளர். எளிமையான காட்டன் சேலையில்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு, கொஞ்சம் மாடர்ன் சரோஜா தேவி போல் மாறி, விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!