Vaazhai:ஒரே டிராக்கில் செல்லும் மாரி செல்வராஜ் - வாழை படத்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய ரகசியம்!

First Published | Aug 30, 2024, 1:13 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படத்தின் வெற்றிக்கு, படத்தின் இறுதியில் இடம்பெற்ற ஒரு உருக்கமான பாடல் முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் பாடல், படத்தின் கருப்பொருளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதோடு, ரசிகர்களின் மனதை நெகிழ வைத்தது.

Pariyerum Perumal

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் வாழை படத்தின் ஹிட்டுக்கு என்ன காரணம் தெரியுமா? கடந்த 23 ஆம் தேதி திரைக்கு வந்த ஸ்மால் பட்ஜெட் படம் வாழை. பெரிய நட்சத்திர பட்டாளும் கிடையாது. சாதாரண நடுத்தர மக்களின் வாழ்க்கையை வாழையோடு வாழையாக பின்னிப்பிணைந்து எடுக்கப்பட்ட படம் வாழை.

Karnan

தனது வாழ்க்கையை சித்திரமாக்கி அதற்கு ஓவியம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். வாழை படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Tap to resize

Maamannan

கிட்டத்தட்ட ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.18 கோடி வரையில் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இந்தப் படத்திற்கு போட்டியாக வந்த சூரியின் கொட்டுக்காளி, போகுமிடம் வெகு தூரமில்லை. அதர்ம கதைகள் என்று சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்தன. இதில், சூரியின் கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

Maamannan

இந்தப் படம் மோசமான விமர்சனத்தை பெறவே, வாழை ஹிட் கொடுக்க தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் கடைசியில் வரும் அந்த ஒரு பாடல். மரணத்தை பின்னணியில் வைத்து எழுதப்பட்ட இந்த பாடல் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கிவிட்டது. வாழை மூலமாக தான் என்ன சொல்ல வந்தேன் என்பதை இந்த ஒரு பாடலில் இயக்குநர் மாரி செல்வராஜ் சொல்லிவிட்டார்.

Mari Selvaraj Vaazhai total collection report out

இந்தப் பாடல் படத்திற்கு பக்க பலமாக பாலமாக அமைந்து ரசிகர்களின் கண்களிலிருந்து கண்ணீரை வர வழைத்தது. இந்தப் படம் தான் அப்படி என்று பார்த்தால் இதற்கும் உன்னதாக மாரி செல்வராஜின் படைப்பில் வந்த மாமன்னன் படமும் கிட்டத்தட்ட அப்படிதான். சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என்று நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

Vaazhai OTT release

இதே போன்று தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த கர்ணன் படமும் இதே போன்று தான் கிராமத்திற்காக போராடும் கதையை மையப்படுத்தி திரைக்கு வந்தது. அதற்கு முன்னதாக வந்த பரியேறும் பெருமாள் சாதி மற்றும் நடன கலையை மையப்படுத்தி திரைக்கு வந்தது. இப்படி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் ஒவ்வொரு படமும் சாதியையும், வாழ்க்கையையும் மையப்படுத்தியே திரைக்கு வருகிறது.

Vaazhai Movie plot

அதோடு இந்தப் படங்களும் வெற்றி படங்களாக அமைகின்றன. காரணம், ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுத்துக் கொள்ளும் இடைவெளி, மற்ற படங்களின் வருகை, நேரம், காலம் ஒத்துழைப்பு என்று பல காரணங்களால் ஒவ்வொரு படமும் வெற்றி படங்களாக அமைகின்றன.

Vaazhai Movie Actresses

வாழையும் அந்த வரிசையில் மற்ற படங்களின் தோல்வி காரணமாக வெற்றியாக அமைந்துவிட்டது. ரசிகர்களும் வாழையை வாழ்க்கையோடு ஒன்றாக கொண்டாடினர்.

Latest Videos

click me!