இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அவர் இசையில் ஏராளமான ஹிட் பாடல்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக யுவனின் இசையமைத்த ஆல்பங்களில் மறக்க முடியாதது என்றால் அது சென்னை 28 தான். இப்படத்தின் மூலம் தான் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது யுவனின் இசை மற்றும் பாடல்கள் தான்.
24
Venkat Prabhu, Yuvan
அப்படத்திற்காக சோகம், சந்தோஷம், காதல் என அனைத்து விதமான எமோஷன்களுக்கும் அவர் பாடல்களை கொடுத்திருப்பார். அன்று தொடங்கிய யுவன் - வெங்கட் பிரபு காம்போ தற்போது கோட் திரைப்படம் வரை தொடர்ந்து வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அந்த வரிசையில் லேட்டஸ்டாக கோட் படமும் இணைந்துள்ளது. அப்படத்தின் பாடல்கள் ஆரம்பத்தில் விமர்சனத்தை சந்தித்தாலும் போகப்போக ரசிகர்கள் வைப் செய்யத் தொடங்கிவிட்டனர்.
யுவன் சங்கர் ராஜா - வெங்கட் பிரபு இருவரும் சகோதரர்கள் என்பதால் அவர்கள் இருவரும் கம்போஸிங்கிலும் ஜாலியாக பணியாற்றுவார்கள். அப்படி சென்னை 28 படத்தின் கம்போஸிங் போது வெங்கட் பிரபு ஒரு காதல் பாடல் கேட்டு யுவனிடம் சென்றிருக்கிறார். அதற்கு ஒரு பாடலை ரெபரன்ஸ் கொடுக்க அந்த பாடல் மாதிரி ஏன் அந்த ட்யூனை அப்படியே காப்பியடித்து யுவன் ஒரு காதல் பாடலை போட்டிருக்கிறார். அந்தப் பாடலும் வேறலெவல் ஹிட் ஆனது.
44
Chennai 28 Movie Copied Song
அது வேறெந்த பாடலும் இல்லை. சென்னை 28-ல் வரும் ‘யாரோ யாருக்குள்’ என்கிற பாடல் தான். யுவனும் வெங்கட் பிரபுவும் இணைந்து முதன்முதலில் காப்பியடித்த பாடலும் இதுதானாம். இப்பாடலை தன்னுடைய தந்தை இளையராஜா இசையமைத்த கோழி கூவுது என்கிற படத்தில் இருந்து தான் காப்பியடித்திருக்கிறார் யுவன். அப்படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ மோகம்’ பாடலில் இருந்து தான் காப்பியடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியது வேறுயாருமில்லை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் தான். தாங்கள் காப்பியடித்த முதல் பாடல் பற்றி யுவன் - வெங்கட் பிரபு இருவருமே ஒரு விழா மேடையில் ஓப்பனாக கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.