தளபதி விஜய், தன்னுடைய பி.ஏ. மூலம் சொன்ன ஒற்றை வார்த்தையால், மனம் நொந்த மூத்த நடிகர் ராதாரவி அவரை பார்க்கச் செல்லும் முடிவை மாற்றி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகரும், அரசியல்வாதியுமான, எம் ஆர் ராதாவின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் தற்போது வரை சக்க போடு போட்டு வருகின்றனர். அதில் நடிகை ராதிகா மிகவும் முக்கியமான நடிகையாவார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக மாறிய இவர், பின்னர் குணச்சித்திர நடிகையாக மட்டுமின்றி... தயாரிப்பாளர், சீரியல் நடிகை, அரசியல்வாதி என பன்முக திறமையாளராக அறியப்படுகிறார்.
26
Radha Ravi Sister Radhika
இவரைப் போலவே இவருடைய அண்ணன் ராதா ரவியும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார். வில்லன், குணச்சித்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் பொருந்தி நடிக்கும் ஆளுமை கொண்டவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு என 80-களில் இருந்து தற்போதைய இளம் ஹீரோக்கள் வரை அனைவருடனும் நடித்துள்ளார்.
குறிப்பாக தளபதி விஜய் ஹீரோவாக அறிமுகமான, 'நாளைய தீர்ப்பு' படம் முதல், பிரெண்ட்ஸ், காதலுக்கு மரியாதை, சுறா, சர்க்கார், போன்ற பல படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் கூறிய வார்த்தையால் ராதாரவி மனம் நொந்த சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
46
Sarkar Movie
அதாவது, ராதாரவியின் பேரன் தளபதி விஜயின் மிகப்பெரிய ரசிகராம். எனவே விஜய் உடன் சேர்ந்து ராதாரவி 'சர்க்கார்' படத்தில் நடிக்கும் போது, விஜயை பார்க்க வேண்டும் என ராதாரவியின் பேரன் ஆசைப்பட... தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் கூட்டிக்கொண்டு ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ராதாரவி சென்ற நிலையில், அவரைகளை விஜய்யுடன் போட்டோ எடுக்க வைத்தாராம்.
இசை வெளியீட்டு விழாவில் ராதாரவிக்கு திடீர் என லோ பிபி-யாகி மயக்கம் வந்து கீழே சரிந்தபோது, விஜய் தான் தன்னை தாங்கிப் பிடித்ததாகவும், இருந்த ராதாரவி நன்றி சொல்வதற்காக விஜய்யின் பி.ஏ-வுக்கு போன் செய்து, தளபதியை சந்திக்க முடியுமா என கேட்டுள்ளார்.
66
Radha Ravi Emotional Speech
விஜய்யின் பி.ஏ. அண்ணன் உங்களை வர சொல்லிட்டார். ஆனால் அன்னைக்கு வந்த மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு வராதீங்க அப்படின்னு அண்ணன் சொல்ல சொன்னார் என்று ராதாரவிக்கு பி ஏ மூலம் பதில் வந்துள்ளது. உடனே ராதாரவி அவரிடம் நான் வரலைன்னு சொல்லிடுப்பா என கூறி விட்டாராம். இது குறித்து பேசி உள்ள ராதாரவி, அவருக்கு நான் அழைத்து வந்தது ஒரு கூட்டமாக தெரியலாம்... ஆனால் எனக்கு அது என்னுடைய குடும்பம் இல்லையா? என மிகவும் நெகிழ்ச்சியோடு பேசி உள்ளார். ராதாரவியின் மனம் நோகும் படி விஜய் இப்படி சொன்னது... பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.